Viral Video: என்னடா நடக்குது இங்க.. முதலையை கடித்த வரிக்குதிரை..!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் முதலையின் பிடியில் சிக்கிய வரிக்குதிரை அதிலிருந்து தப்பிக்கும் அதிர்ச்சி தரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தண்ணீர் குடிக்கச் சென்ற வரிக்குதிரையை முதலை தாக்கிய நிலையில் அது தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் அனைத்து விதமான உயிரினங்களுக்கும் சொந்தமானது. பூமியில் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் எந்த இடத்தில் வாழ வேண்டும் என்பது இயற்கை தீர்மானித்துள்ளது. இயற்கையை மீறி நாம் செயல்படும்போது அழிந்து தான் போவோம் என்பது எழுதப்படாத விதி ஆகும். அதே நேரத்தில் சில நேரங்களில் இயற்கை நமக்கு எதிர்பாராத வாய்ப்புகளையும் வழங்கும். அதாவது ஆபத்தில் இருக்கும் ஒருவன் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வருவதைப் போல எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் முதலை (Crocodile) ஒன்றிடம் வசமாக மாட்டிக் கொண்ட வரிக்குதிரை (Zebra) ஒன்று போராடி தப்பிக்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது (Viral Video) அதனைப் பற்றி காணலாம்.
பொதுவாக நீர் நிலைகள் நிறைந்த இடத்தில் நம்முடைய குடும்பத்தினர் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என நமக்கு அறிவுரை சொல்வார்கள். நீர்நிலைகளில் பாம்பு, முதலை, மீன்கள், நீர் பறவைகள் என பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் முதலையை எடுத்துக் கொண்டால் அது நீரிலும் வாழக்கூடியது, நிலத்திலும் வாழக்கூடியது. இப்படிப்பட்ட முதலை நிலத்தை விட நீரில் மிக வீரியமாக செயல்படும். இது தொடர்பான வீடியோக்களை நாம் பார்த்திருந்தால் முதலையின் பிடி எப்படி இருக்கும் என்பதை தெரியும். மிகப்பெரிய உயிரினங்களே மிரண்டு போகும் அளவுக்கு முதலை தாக்குதல் நடத்தும்.
வைரலாகும் வீடியோ
That zebra bit the damn croc 🤯 pic.twitter.com/EcUCNHTv11
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 8, 2025
இந்த வீடியோவை Nature is Amazing என்ற வலைத்தளப் பக்கம் பகிர்ந்துள்ளது. அதில் நீர் நிலைகளில் தண்ணீர் குடிக்க களமிறங்கிய வரிக்குதிரையை முதலை ஒன்று லாவகமாக பிடிக்கிறது. நீர் யானைகளும் அந்த இடத்தில் இருக்கிறது. முதலையிடம் மாட்டிக் கொண்ட வரிக்குதிரை கதை முடிந்தது என வீடியோவைப் பார்த்தால் நினைக்கலாம். ஆனால் இருங்க பாய் இன்னும் ஆட்டம் முடியல என்பது போல வரிக்குதிரை முதலையை ஒரு கடி கடிக்கிறது.
இதனால் மிரண்டு போன முதலை தனது பிடியை விடுகிறது. கிடைத்தது கேப்பு.. எடுத்தேன் பாரு ஓட்டம் என்பது போல வரிக்குதிரை தப்பிக்க கரையை நோக்கி ஓடுகிறது. ஆனால் ஒன்னொரு முதலை வரிக்குதிரையை கடிக்க பாய்கிறது. ஆனால் சரியாக தப்பிய வரிக்குதிரை கரையேறி ஓடிச் செல்கிறது. இந்த வீடியோ 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 12,000 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.இந்த வீடியோவில் எதிர்பாராத ட்விஸ்டாக வரிக்குதிரை முதலையை கடித்தது அமைந்தது.
முதலையில் பிடியும், வரிக்குதிரையில் போராட்ட குணம் மற்றும் தப்பிக்க பயன்படுத்திய உத்தி ஆகியவை மனிதர்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
முதலையின் பிடியிலிருந்து வரிக்குதிரை தன்னை விடுவித்துக் கொண்டு தாக்குதலில் இருந்து தப்பித்ததைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து பாராட்டியுள்ளனர். சிலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில், ஒருவர், “கடைசியில் வரிக்குதிரை தப்பியதும் மிகவும் நிம்மதியாக இருந்தது. இது இயற்கைதான் என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒரு விலங்கு துன்பப்படுவதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.