சிவகங்கையில் நாளை முதல் 31 வரை 144 தடை – விவரம் இதோ

Sivagangai District 144 Order : மருது சகோதரர்கள் குருபூஜை நடைபெறவுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் 23, 2025 முதல் அக்டோபர் 31, 2025 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கையில் நாளை முதல் 31 வரை 144 தடை - விவரம் இதோ

மாதிரி புகைப்படம்

Published: 

22 Oct 2025 20:47 PM

 IST

சிவகங்கை அக்டோபர் 22: மாமன்னர்கள் மருது பாண்டியர் குருபூஜை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா ஆகியவற்றை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சிவகங்கை (Sivaganga) மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அரசு சார்பில் ஆண்டுதோறும் மருது பாண்டியர் குரு பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் 224வது ஆண்டு குருபூஜை விழா வரும் அக்டோபர் 24, 2025 அன்று நடைபெறுகிறது.  மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூர் பகுதியில் தமிழ்நாடு அரசு ஏற்பாட்டில் விழா நடைபெறும். மேலும், அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவில் பகுதியில் அக்டோபர் 27 , 2025  அன்று சமூக அமைப்புகள் சார்பில் குருபூஜை விழா நடைபெறும்.

மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு,  மாநிலம் முழுவதும் இருந்து பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் சிவகங்கைக்கு வருகை தருவர்.  இதனால் மக்கள் அதிகமாக வருவர் என்பதால் பாதுகாப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.  மேலும், அக்டோபர் 30, 2025 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. இதற்கும் நாடு முழுவதும் இருந்து மக்கள் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பொளந்து கட்டும் பருவமழை.. சென்னையில் 12 பேரிடர் மீட்பு படைகள் தயார்!

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மருது பாண்டியர்கள் குருபூஜை மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் போர்கொடி அக்டோபர் 23, 2025 முதல் அக்டோபர் 31, 2025 அன்று வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் கூட்டம் கூடுதல் பேரணி, அரசியல் கூட்டம் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள்

மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் அனைவரும் அடையாள ஆவணங்களுடன் அனுமதி பெற்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேககிக்கும் நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் போர்கொடி தெரிவித்ததாவது, மாவட்டத்தில் அமைதி நிலவும் வகையில் காவல்துறை முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து ஒத்துழைக்க வேண்டும் என்றார்

இதையும் படிக்க : மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு

இது தொடர்பான 144 தடை அக்டோபர் 23, 2025 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.