விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற சிறுவன்.. துடிதுடித்து பலியான சோகம்.. பெற்றோரே உஷார்!

Vellore Crime News : வேலூர் மாவட்டத்தில் விஷப் பூச்சி கடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற சிறுவனை, விஷப் பூச்சி கடித்துள்ளது. இதனை அடுத்து சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற சிறுவன்.. துடிதுடித்து பலியான சோகம்.. பெற்றோரே உஷார்!

மாதிரிப்படம்

Updated On: 

28 Aug 2025 12:07 PM

வேலூர், ஆகஸ்ட் 28 : வேலூர் மாவட்டத்தில்  13 வயது சிறுவன் விஷப் பூச்சி கடித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிப்பதற்காக சிறுவன் சென்றபோது, அங்கிருந்த விஷப் பூச்சி ஒன்று கடித்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.  தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி கோலகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதே சமயம் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடும் நடத்தப்பட்டது. விநாயகருக்கு கொழுக்கட்டை மாவு, பூக்கள், தோரணம், அருங்கம்புல் என அனைத்தும் வைக்கப்பட்டு வீடுகளில் வழிபாடு செய்யப்பட்டது.

இப்படி கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டப்பட்டது. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அருகம்புல்  பறிக்க சென்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் விருப்பாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் முடிதிருத்தும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 13 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. விநாயகர் சதுர்த்தியையொட்டி, 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு 8 மணியளவில் சிறுவன் அருகம்புல் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

Also Read : ஒரு வாரத்தில் திருமணம்.. பத்திரிகை கொடுக்க சென்ற மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்!

விஷப் பூச்சி கடித்து 13 சிறுவன் பலி

அப்போது, சிறுவனை காலில் விஷப் பூச்சி ஒன்று கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் அலறி துடித்துள்ளனர். சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு, சிறுவனின் தந்தை சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது, சிறுவன் மயக்கமடைந்துள்ளார்உடனே அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான நேற்று காலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்இதனை அடுத்து, சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுவனை விஷப் பூச்சி கடித்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also Read : விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான முருகன் கற்சிற்பம்.. வியப்பூட்டும் தகவல்கள்!

சிறுவனை என்ன வகையான விஷப் பூச்சி கடித்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்விநாயகர் சதுர்த்தி அன்று சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தோட்டம், புதர்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.  அடர்ந்த பகுதி என்பதால், அந்த இடங்களில் பூச்சி, பாம்பு போன்றவை இருக்கக் கூடும். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகள் இதுபோன்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்ப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.