செல்போனில் கேம் விளையாடியதால் திட்டிய தாய்.. 13 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு..
13 Year Boy Commits Suicide: திருப்பூர் தாராபுரத்தில் 13 வயது சிறுவன் அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதால் தாய் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவனை, பெற்றோர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதற்காக திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் பள்ளி முடித்தவுடன் தினசரி மாலை வீட்டுக்கு வந்தபின் தாய் அல்லது தந்தையின் செல்போனில் கேம் விளையாடுவது அல்லது வீடியோவை பார்ப்பது வழக்கமாக வைத்திருந்தார். இதன் காரணமாக நீண்ட நேரம் செல்போனில் பயன்படுத்துவதால் பெற்றோர்கள் திட்டியுள்ளனர். அதனால் 13 வயது சிறுவன் விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக செல்போன் மாறி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் செல்போனின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நமக்கு என்ன தேவையோ அது அனைத்துமே ஒரு நொடியில் கிடைப்பது போல் செல்போன் அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதள பக்கங்களில் வரக்கூடிய வீடியோக்கள் ரிலீஸ் மோகத்தில் நாம் அனைவருமே மூழ்கிக் கிடக்கிறோம். அல்லது வீடியோக்களை பார்த்தால் எவ்வளவு நேரம் அதில் கழிக்கிறோம் என்பதை நாம் மெய் மறந்து விடுகிறோம்.
செல்போனால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு:
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அங்கு இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விட்டு வீட்டிற்கு திரும்பியவுடன் அந்த சிறுவன் தாய் அல்லது தந்தையின் செல்போனில் கேம் விளையாடுவது வீடியோக்களை பார்ப்பது வழக்கமாக வைத்திருந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதற்காக கடுமையாக கடிந்து உள்ளார். அதே போல் 13 வயது சிறுவனுக்கு மூன்று வயதில் தம்பி உள்ளார்.
மூன்று வயது தம்பி விடாமல் அழுதுள்ளார், ஆனால் அதனை கூட கண்டுகொள்ளாமல் அந்த 13 வயது சிறுவன் தொடர்ந்து செல்போனில் கவனம் செலுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தாய் தம்பி அழுவது கூட தெரியாமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என கடுமையாக திட்டி உள்ளார். அதேபோல் செல்போனையும் வெடுக்கென்று பிடுங்கி உள்ளார்.
13 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்:
இதனால் மனம் உடைந்த அந்த 13 வயது சிறுவன் தோட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே அந்த சிறுவன் மயங்கி விழுந்து உள்ளார். உடனடியாக தனது தாய் பதற்றத்தில் அவனை தூக்கி அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்து நிறைந்தது மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் என பலரும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு செல்போன் கட்டாயம் கொடுக்கக் கூடாது என தெரிவிக்கின்றனர். இதுபோன்ற ஆபத்திலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேறு வழிகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது