WCL 2025: பாகிஸ்தான் எதிராக விளையாட மறுத்த இந்திய வீரர்கள்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து!

Ind vs Pak Match Cancel: உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025ல் இந்தியா-பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி, இந்திய வீரர்களின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி ரத்து குறித்து ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

WCL 2025: பாகிஸ்தான் எதிராக விளையாட மறுத்த இந்திய வீரர்கள்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து!

இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ்

Published: 

20 Jul 2025 18:38 PM

 IST

உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 (World Championship Of Legends) போட்டியின் ஏற்பாட்டாளர்கள், இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான (India – Pakistan Tension) அரசியல் உறவு காரணமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் ஏற்பாட்டாளர்கள் போட்டியை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ரத்தானதை தொடர்ந்து, யுவராஜ் சிங் (Yuvraj Singh) தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் அணி வருகின்ற ஜூலை 22ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுகிறது.

மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டாளர்கள்:

உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL) 2025 ஜூலை 20ம் தேதியான இன்று இந்திய சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையேயான போட்டி நடைபெற இருந்தது. இடையே போர் நிறுத்தம் இருந்தபோதிலும், பதற்றம் இன்னும் நீடிக்கிறது. இதன் தாக்கம் விளையாட்டு போட்டிகளிலும் தொடர்கிறது. லண்டனில் நடைபெற்று வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை ரத்து செய்த பிறகு , உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் முக்கிய அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் நாங்கள் எப்போதும் கிரிக்கெட்டை மதிப்பவர்களாகவும் நேசிப்பவர்களாகவும் இருக்கிறோம். ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதே எங்கள் ஒரே நோக்கம்.

ALSO READ: 3 லட்சம் ரூபாய் தங்க ஜெர்சி..! அதிக மதிப்புள்ள ஆடையுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்!

நிர்வாகம் மன்னிப்பு:

இந்த வருடம் பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவிற்கு வருகை தருகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பிறகும், சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கைப்பந்து போட்டியைப் பார்த்த பிறகும், ரசிகர்களுக்கு சில நல்ல நினைவுகளை உருவாக்கும் வகையில் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு போட்டியை ஏற்பாடு செய்ய நினைத்தோம். ஆனால், இந்த முயற்சியில் நாங்கள் பலரின் உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கலாம்.

அதற்கும் மேலாக, நாட்டிற்கு பெருமை சேர்த்த நமது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு நாங்கள் கவனக்குறைவாக சிரமத்தை ஏற்படுத்தினோம், மேலும் எங்களை ஆதரித்த பிராண்டுகளையும் பாதித்தோம். எனவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் . உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவர நாங்கள் விரும்பினோம் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தது.

ALSO READ: 2007க்கு பிறகு மீண்டும் பவுல்-அவுட் முடிவு.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி கலக்கிய தென்னாப்பிரிக்கா!

ரத்து செய்வதற்கான காரணம் என்ன..?

உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதற்கான காரணம், இந்த போட்டியில் இருந்து 5 இந்திய வீரர்கள் விலகியதே ஆகும். பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு, உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.