WPL 2026: 2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் எப்போது தொடக்கம்..? வெளியான தகவல்..!
Women's Premier League 2026: பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துவது தொடர்பான இடங்கள் குறித்து விவாதித்து வருகிறது. இருப்பினும், அணி உரிமையாளர்களுக்கு இன்னும் இதுகுறித்தான தகவல் தெரிவிக்கப்படவில்லை. வருகின்ற 2025 நவம்பர் 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தின் போது ஐந்து அணிகளுக்கும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
இந்தியாவில் இந்திய பிரீமியர் லீக் (IPL 2026) போட்டிகளை போன்று, மகளிர் பிரீமியர் லீக் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மகளிர் பிரீமியர் லீக் 3 சீசன்களை கடந்துள்ளது. இந்தநிலையில், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை (ICC Women’s World Cup 2025) தொடர்ந்து, மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனுக்கான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கிரிக்பஸ் தகவலின்படி, 2026 WPL சீசன் வருகின்ற 2025 ஜனவரி 7 முதல் 2025 பிப்ரவரி 3 ம் தேதி வரை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. WPL 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் 2026க்கான மெகா ஏலம் வருகின்ற 2025 நவம்பர் 27ம் தேதி டெல்லியில் நடைபெறும். WPL தொடங்கப்பட்டத்திலிருந்து நடைபெறும் முதல் மெகா ஏலம் இதுவாகும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ALSO READ: ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள்.. காத்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள்.. A-to-Z விவரங்கள் இதோ!




மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் எங்கு நடத்தப்படவுள்ளது..?
🚨 WPL 2026 likely in Mumbai and Baroda from Jan 7 to Feb 3 pic.twitter.com/5GRFqEHYaf
— Cricbuzz (@cricbuzz) November 17, 2025
கிரிக்பஸ் அறிக்கையின்படி, WPL 2026 சீசன் இரண்டு கட்டங்களாக நடத்தப்படலாம். போட்டியின் முதல் கட்டம் DY பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படலாம். இறுதிப் போட்டி உட்பட இரண்டாம் கட்டம் பரோடாவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடத்தப்படலாம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜனவரி 11ம் தேதி பரோடா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது, மகளிர் பிரீமியர் லீக்கின் 2ம் கட்டம் 2025 ஜனவரி 16ம் தேதி தொடங்கலாம். கடந்த 2025ம் ஆண்டு, WPL பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இருப்பினும், இந்த ஆண்டு, 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். எனவே, WPL முன்னதாகவே நடைபெறும்.
பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துவது தொடர்பான இடங்கள் குறித்து விவாதித்து வருகிறது. இருப்பினும், அணி உரிமையாளர்களுக்கு இன்னும் இதுகுறித்தான தகவல் தெரிவிக்கப்படவில்லை. வருகின்ற 2025 நவம்பர் 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தின் போது ஐந்து அணிகளுக்கும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
ALSO READ: ஸ்மிருதி மந்தனாவுக்கு டும்! டும்! டும்! எப்போது..? எங்கு தெரியுமா..? வெளியான அப்டேட்!
மும்பை 2 முறை சாம்பியன் பட்டம்:
மகளிர் பிரீமியர் லீக் இதுவரை 3 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறையும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.