Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India Women vs Sri Lanka Women: இந்தியா – இலங்கை இடையே யார் அதிக ஆதிக்கம்..? நேருக்குநேர் சாதனை விவரம் இதோ!

Women's World Cup 2025: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையே இதுவரை மொத்தம் 35 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதிலும், இந்திய அணியே அதிகளவில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்த 35 போட்டிகளில் இந்திய அணி 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

India Women vs Sri Lanka Women: இந்தியா – இலங்கை இடையே யார் அதிக ஆதிக்கம்..? நேருக்குநேர் சாதனை விவரம் இதோ!
இந்தியா மகளிர் - இலங்கை மகளிர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Sep 2025 11:42 AM IST

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (Women’s World Cup 2025) வரலாற்றில் 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தாலும், இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லாத இந்திய மகளிர் அணி (India Women vs Sri Lanka Women), இந்த முறை வரலாற்றை உருவாக்கும் நோக்கத்துடன் களத்தில் இறங்குகிறது. இன்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்குகிறது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளும் இணைந்து மகளிர் உலகக் கோப்பையை நடத்துகின்றன. அதேநேரத்தில், இலங்கை அணியும் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. எனவே, இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் ஆதிக்கத்தை செலுத்த விரும்புவார்கள். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நேருக்குநேர் சாதனை, கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மீண்டும் IND – PAK போட்டி! வெற்றி வரலாற்றை தக்கவைக்குமா இந்திய அணி..? போட்டி எப்போது?

நேருக்குநேர் சாதனை:


இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையே இதுவரை மொத்தம் 35 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதிலும், இந்திய அணியே அதிகளவில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்த 35 போட்டிகளில் இந்திய அணி 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2025ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த போட்டிகளில் 2ல் இந்தியா 9 விக்கெட்டுகளும், 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஒரு போட்டியில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

2025 மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமஞ்சோத் கவுர், அருந்ததி கோட் ரெட்டி.

ALSO READ: நாளை முதல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை.. இந்தியா-இலங்கை போட்டியை எங்கே காண்பது?

2025 மகளிர் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி

சாமரி அதபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்ன, ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, இமேஷா துலானி, டுமி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேஷிகல் குமாரி