India Women vs Sri Lanka Women: நாளை முதல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை.. இந்தியா-இலங்கை போட்டியை எங்கே காண்பது?
Women's Cricket World Cup 2025: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் போட்டி, குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். தொடக்க விழாவும் போட்டிக்கு முன்னதாக நடைபெறும். பாகிஸ்தான் தவிர மற்ற 7 அணிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்கும்.

2025 ஆசியக் கோப்பைக்கு பிறகு, 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் (India Women vs Sri Lanka) நடைபெறவுள்ளது. வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியின் முதல் போட்டி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடைபெறுகிறது. இந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (Women’s Cricket World Cup) இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இறுதிப்போட்டி உட்பட 31 போட்டிகளில் விளையாடுகிறது. லீக் ஸ்டேஜ் போட்டியில் அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடும். அதேநேரத்தில், 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது. வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி அதாவது நாளை கவுகாத்தியில் நடைபெறும் தொடக்க விழாவில் பாகிஸ்தான் மகளிர் அணி மட்டும் பங்கேற்காது.
முதல் போட்டி எந்த ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது..?
SKY ➡️ Jemimah Rodrigues🥳
மாறி மாறி தங்களோட Favourite ஆன விஷயங்களை சொல்லும் 2 superstars😜
📺 காணுங்கள் | ICC Women’s Cricket World Cup | India vs Sri Lanka | September 30, 2:00 PM | JioHotstar & Star Sports Network-ல்#CWC25 pic.twitter.com/s4OlswwQl4
— Star Sports Tamil (@StarSportsTamil) September 28, 2025
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் போட்டி, குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். தொடக்க விழாவும் போட்டிக்கு முன்னதாக நடைபெறும். பாகிஸ்தான் தவிர மற்ற 7 அணிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்கும். இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் ஒன்றுக்கொன்று தலா ஒரு போட்டியில் விளையாடும். முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும்.




ALSO READ: பும்ரா தரமான செய்கை.. நொந்துபோன பாகிஸ்தான் வீரர்!
இந்திய மகளிர் vs இலங்கை மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் போட்டி எந்த நாளில் நடைபெறும்?
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும். இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கும். அதேநேரத்தில், டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக, பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும்.
இந்தியா-இலங்கை போட்டி இந்தியாவில் எந்த மைதானத்தில் நடைபெறும்?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2025 மகளிர் உலகக் கோப்பையின் முதல் போட்டி குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் உலகக் கோப்பை போட்டியை எந்த தொலைக்காட்சி சேனலில் நேரடியாக பார்க்கலாம்..?
மகளிர் உலகக் கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸின் தனித்தனி சேனல்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1/HD மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்/HD ஆகியவற்றில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வர்ணனைகளுடன் போட்டிகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
ALSO READ: இந்திய அணி எப்போது ஆசிய கோப்பையை கிடைக்கும்? நக்விக்கு பிசிசிஐ இறுதி எச்சரிக்கை!
இந்தியா vs இலங்கை போட்டி எந்த தளத்தில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும்?
2025 செப்டம்பர் 30ம் தேதியான நாளை நடைபெறும் இந்தப் போட்டியின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கை JioHotstar செயலி அல்லது இணையதளத்தில் காணலாம்.