IPL 2026: இனி ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கக்கூடாது… ஆர்சிபி அணியை மோட்டிவேட் செய்த விராட் கோலி!

Virat Kohli Motivated RCB Team: விராட் கோலி ஆர்சிபி அணியை உற்சாகப்படுத்தும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பேசிய கோலி இந்த சீசனில் அணி புதிய சவால்களை எதிர்கொள்ளும் என்றும் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தை தக்கவைத்து கொள்ள விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

IPL 2026: இனி ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கக்கூடாது... ஆர்சிபி அணியை மோட்டிவேட் செய்த விராட் கோலி!

விராட் கோலி

Published: 

21 Mar 2026 17:19 PM

 IST

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. இதையடுத்து, ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் (Virat Kohli) பல பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது, ​​கோலி ஆர்சிபி அணியை உற்சாகப்படுத்தும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பேசிய கோலி இந்த சீசனில் அணி புதிய சவால்களை எதிர்கொள்ளும் என்றும் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தை தக்கவைத்து கொள்ள விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது.

ALSO READ: ஐபிஎல்லில் ஒரு வீரருக்கு எதிராக அதிக ரன்கள்.. விரட்டி விரட்டி அடித்த விராட் கோலி..!

விராட் கோலி என்ன சொன்னார்?


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது X தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அணியினரிடம் உரையாற்றுவது காணப்பட்டது. அதில் கோலி கூறுகையில், ”கடந்த 2025 ஆண்டு நாங்கள் அடைந்த வெற்றியை எட்டுவதற்காக, கடந்த இரண்டு அல்லது மூன்று சீசன்களாக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். இப்போது சவால் இன்னும் கடினமாக இருக்கப் போகிறது. ஏனெனில், ஐபிஎல்லில் பங்கேற்கும் மற்ற அணிகள் முழுமையாகத் தயாராகி எங்களை எதிர்கொள்ள வரும்.

வரும் நாட்களை நாம் வீணாக்க மாட்டோம். நாம் எப்போதும் முன்னணியில் இருப்போம். எனவே, இப்போதே முழுமையாகத் தயாராகுங்கள். நாம் கலந்துகொள்ளும் எந்தவொரு பயிற்சி அமர்விலும் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க மாட்டோம். இந்த இரண்டரை மாதங்களில் நாம் 120% உழைப்பைக் கொடுக்க வேண்டும். அனைவரின் முகங்களிலும் உள்ள உற்சாகத்தை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. மீண்டும் ஒருமுறை இந்தச் சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ALSO READ: ஒரு ஓவரில் 37 ரன்கள்.. ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 5 பந்துவீச்சாளர்கள்..!

ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் பாராட்டு:

ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவரும் அணியைப் பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”ஐபிஎல் 2026 மினி ஏலம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் எங்கள் அணியை இன்னும் வலுப்படுத்தியுள்ளோம் என்றே நான் கருதுகிறேன். நாங்கள் அணியில் சில சிறந்த புதிய வீரர்களைச் சேர்த்துள்ளோம். இந்த புதிய வீரர்களை ஆர்சிபி கலாச்சாரத்திற்கு ஏற்ப பழக்கப்படுத்துவதும், அதே நேரத்தில் விராட் மற்றும் ரஜத் போன்ற அனுபவமிக்க வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், ஒரு புதிய அணியை உருவாக்கும் இந்தப் பயணத்தின் மிகவும் உற்சாகமான பகுதியாகும்” என்றார்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்