Vijay Hazare Trophy: சூடுபிடித்த முதல் நாள்.. விஜய் ஹசாரே டிராபியில் படைக்கப்பட்ட டாப் 5 ரெக்கார்ட்ஸ்..!
Vijay Hazare Trophy 1st Day Records: விஜய் ஹசாரா டிராபியின் முதல் நாளில் வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலி, ரோஹித் சர்மா (Rohit Sharma) உள்பட மொத்தம் 22 பேர் சதங்களை பதிவு செய்தனர். மறுபுறம், ஒடிசாவின் ஸ்வஸ்திக் சாம்லே இரட்டை சதம் அடித்தனர். மேலும், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக பீகார் அணி 574 ரன்கள் எடுத்தது. இதனுடன் பல சாதனைகள் படைக்கப்பட்டன.

விஜய் ஹசாரே டிராபியின் முதல் நாள் ரெக்கார்ட்ஸ்
இந்தியாவின் உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே டிராபி 2025-26 சீசன் (Vijay Hazare Trophy 2025-26) நேற்று அதாவது 2025 டிசம்பர் 24ம் தேதி முதல் தொடங்கியது. முதல் நாளில் வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலி, ரோஹித் சர்மா (Rohit Sharma) உள்பட மொத்தம் 22 பேர் சதங்களை பதிவு செய்தனர். மறுபுறம், ஒடிசாவின் ஸ்வஸ்திக் சாம்லே இரட்டை சதம் அடித்தனர். மேலும், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக பீகார் அணி 574 ரன்கள் எடுத்தது. இதனுடன் பல சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தநிலையில், விஜய் ஹசாரே டிராபி போட்டியின் முதல் நாளில் படைக்கப்பட்ட 10 பெரிய சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ரோஹித் சர்மாவின் சிறப்பு சாதனை:
மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா சிக்கிம் அணிக்கு எதிராக 155 ரன்கள் எடுத்தார். 94 பந்துகளை மட்டுமே விளையாடிய ரோஹித் சர்மா 9 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 155 ரன்களை அடித்தார். இதன்மூலம், விஜய் ஹசாரே டிராபியில் சதம் அடித்த இரண்டாவது வயதான வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றுள்ளார். தற்போது ரோஹித்துக்கு 38 வயது 238 நாட்கள் ஆகும். இந்த பட்டியலில் வங்காளத்தின் அனுஸ்டுப் மஜும்தார் தனது 39 வயதில் சதம் அடித்திருந்தார்.
ALSO READ: உள்நாட்டு கிரிக்கெட்டிலும் உயர்ந்த சம்பளம்.. மகிழ்ச்சியில் மகளிர் வீராங்கனைகள்.. அசத்தும் பிசிசிஐ!
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை கடந்த விராட் கோலி:
ஆந்திராவுக்கு எதிராக 101 பந்துகளில் 131 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஒரு ரன் மட்டுமே எடுத்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்தார். ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16000 ரன்களை வேகமாக கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். கோலி 330 இன்னிங்ஸ்களில் இந்த எண்ணிக்கையை எட்டிய நிலையில், சச்சின் டெண்டுல்கர் லிஸ்ட் ஏ-வில் 16000 ரன்களை கடக்க 391 இன்னிங்ஸ்களை எடுத்து கொண்டார்.
ஸ்வஸ்திக் சாம்லே இரட்டை சதம்:
விஜய் ஹசாரே டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையை ஒடிசா வீரர் ஸ்வஸ்திக் சாம்லே படைத்தார். இவர் சவுராஷ்டிராவுக்கு எதிராக 169 பந்துகளில் 212 ரன்கள் எடுத்தார், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒடிசாவுக்காக இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆனார். இருப்பினும், ஒடிசா அணி சவுராஷ்டிராவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது மிகப்பெரிய வெற்றி
பீகார் அணி அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 397 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது பெரிய வெற்றியாகும். முதலாவது தமிழ்நாடு அணி, 2022-23ல் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரா டிராபியில் அதிவேக சதம்
விஜய் ஹசாரா டிராபியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பீகார் கேப்டன் சகிபுல் கனி படைத்தார். இவர் வெறும் 32 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இந்தியர் அடித்த வேகமான சதமாகும். 2024 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்த அன்மோல்பிரீத் சிங்கின் சாதனையை சகிபுல் கனி முறியடித்தார்.
ALSO READ: ரன் மெஷினாக திகழும் கோலி, ரோஹித்.. விஜய் ஹசாராவில் சதம் அடித்து கலக்கல்..!
வரலாற்றில் முதல் முறை:
விஜய் ஹசாரே டிராபி வரலாற்றில் ஒரு அணிக்காக ஒரே இன்னிங்ஸில் 3 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தது இதுவே முதல் முறை. பீகார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் சகிபுல் கனி மற்றும் ஆயுஷ் ஆனந்த் ஆகியோர் சதம் அடித்தனர். மூவரும் 50 பந்துகளுக்குள் தங்கள் சதங்களை பதிவு செய்து புதிய சாதனையை படைத்தனர்.