News9 CBC 2025: நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி.. உற்சாக வரவேற்பு!
News9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025, மே 9-11 வரை ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் நடைபெறுகிறது. முன்னாள் சாம்பியன் புல்லேலா கோபிசந்த் மேற்பார்வையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாக்டர் ரெட்டீஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 நெட்வொர்க்கான TV9 நெட்வொர்க் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் நாடு முழுவதும் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு TV9 நெட்வொர்க் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற கார்ப்பரேட் கால்பந்து கோப்பை போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது. இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டியானது நடத்தப்பட உள்ளது.
இந்தப் போட்டி புகழ்பெற்ற முன்னாள் பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிசந்தின் மேற்பார்வையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025, ஹைதராபாத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் மே 9 முதல் 11 வரை 3 நாட்கள் நடைபெறும்.
நியூஸ்9 பேட்மிண்டன் போட்டிக்கான முன்பதிவுகள் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்துஅட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. மே9 ஆம் தேதி முதல் நடக்கும் நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு விளையாட்டு வீரர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தொழில்துறையில் உள்ள சில முன்னணி நிறுவன நிறுவனங்களின் ஊழியர்களின் அதிக ஆர்வம் காட்டி விளையாட பதிவு செய்திருக்கின்றனர்.
குறிப்பாக டாக்டர் ரெட்டீஸ், மைக்ரோசாப்ட், ஆக்சென்ச்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, அமேசான், ஜென்பேக்ட், கேப்ஜெமினி மற்றும் பல நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த உற்சாகமான நிகழ்விற்கு முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டுகிறது என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
2025 மே 9 முதல் மே 11 வரை நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள், நிச்சயம் நிறுவன ஊழியர்களின் விளையாட்டுத் திறனையும் திறமையையும் வெளிப்படுத்தும்.வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் போட்டிகளுக்குத் தயாராவதற்கான நேரத்தைச் சரிபார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் முழு அட்டவணையைப் பார்க்கவும்.
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன்
இந்த போட்டித் தொடரானது வெறும் விளையாட்டாக இல்லாம சக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இடையே நட்பை வளர்ப்பதற்கும், பெருநிறுவன உறவுகளை உருவாக்குவதற்கும், நிபுணர்களிடையே விளையாட்டு உணர்வைக் கொண்டாடுவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. ஹைதராபாத்தின் கச்சிபவுலியில் உள்ள புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் நடைபெறும் நியூஸ் 9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இது பெருநிறுவன விளையாட்டுகளில் ஒரு மைல்கல் நிகழ்வாகக் கருதப்படும்.