T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள்.. இதுவரை அணிகளை அறிவித்த 5 நாடுகள்..!

All Squads T20 World Cup 2026: 2026 உலகக் கோப்பையில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் நிலையில், தலா 5 அணிகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்படும். லீக் ஸ்டேஜ் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள்.. இதுவரை அணிகளை அறிவித்த 5 நாடுகள்..!

சூர்யகுமார் யாதவ் - ரஷீத் கான் - ஹாரி ப்ரூக்

Published: 

31 Dec 2025 17:41 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையானது (2026 T20 World Cup) வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. இதன் இறுதிப் போட்டியானது 2026ம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமாக பங்கேற்கும் 20 அணிகள் தங்கள் உலகக் கோப்பை அணிகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றன. இதுவரை, இந்தியா (Indian Cricket Team), இங்கிலாந்து உட்பட ஐந்து நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்துள்ளன. உலகக் கோப்பையில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் நிலையில், தலா 5 அணிகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்படும். லீக் ஸ்டேஜ் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதன் பிறகு, தகுதிபெற்ற 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்.

சூப்பர் 8 சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்தவகையில், இதுவரை எந்த அணிகள் தங்கள் உலகக் கோப்பை அணிகளை அறிவித்துள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி எப்போது அறிவிக்கப்படும்? கிடைத்த முக்கிய அப்டேட்!

இதுவரை எந்த அணிகள் தங்கள் அணிகளை அறிவித்துள்ளன?

இந்தியா

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா , ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்

இங்கிலாந்து


ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், சாம் கரன், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டோங்கே, லூக் வுட்

இலங்கை (முதற்கட்ட அணி)

தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, ஜனித் லியனகே, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வனிந்து வெல்லுனி ஹசரங்க, ஐ. மலிங்கா, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன, தில்ஷன் மதுஷங்க, மகேஷ் தீக்ஷனா, துஷான் ஹேமந்த, விஜயகாந்த் வியாஸ்காந்த், ட்ராவீன் மேத்யூ

ஆப்கானிஸ்தான்

ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, அப்துல்லா அஹ்மத்சாய், செடிகுல்லா அடல், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ரஹ்மானுல்லா குர்பாஸ், நவீன் உல் ஹக், முகமது இஷாக், ஷாஹிதுல்லா கமால், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப்ரான் உமர்சாய், முஜீப்ராஹ் உமர்சாய்,

ரிசர்வ் வீரர்கள்:

ஏஎம் கசன்ஃபர், இஜாஸ் அஹ்மத்சாய் மற்றும் ஜியா உர் ரஹ்மான் ஷரிஃபி

ALSO READ: 2026ல் ரோஹித் – கோலி எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடுவார்கள்..? முழு விவரம் இங்கே!

ஓமன்

ஜதீந்தர் சிங் (கேப்டன்), விநாயக் சுக்லா, முகமது நதீம், ஷகீல் அகமது, ஹம்மத் மிர்சா, வாசிம் அலி, கரண் சோனாவாலே, ஷா பைசல், நதீம் கான், சுஃப்யான் மஹ்மூத், ஜே ஒடேதரா, ஷபிக் ஜான், ஆஷிஷ் ஒடேதரா, ஷாஹ் ரமானந்தி, ஹஸ்னைன் அலி

தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..
2025 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. விரிவாக பார்க்கலாம்..
விஜய்யை காண கூடிய ரசிகர்கள்.. கூட்டநெரிசலில் தடுமாறி விழுந்த விஜய்..
பாலிவுட், டாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்.. சல்மான்கான் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்..