Abhishek Sharma: சரியில்லாமல் போன உடல்நிலை.. மருத்துவமனையில் அபிஷேக் சர்மா.. பதட்டத்தில் ரசிகர்கள்!
India vs Namibia: அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் சர்மா கோல்டன் டக்-ஆகியிருந்தாலும், சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு மும்பையிலிருந்து, அபிஷேக் சர்மா அணியுடன் டெல்லிக்கு பயணம் செய்தார்.

அபிஷேக் சர்மா
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) வயிற்று தொற்று காரணமான கடந்த 2026 பிப்ரவரி 9ம் தேதி டெல்லியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு மருத்துவர்களின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அபிஷேக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிசிசிஐ (BCCI) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஆரம்பகட்ட பரிசோதனைகளில் வயிற்றில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ALSO READ: பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
என்ன நடந்தது..?
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் சர்மா கோல்டன் டக்-ஆகியிருந்தாலும், சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு மும்பையிலிருந்து, அபிஷேக் சர்மா அணியுடன் டெல்லிக்கு பயணம் செய்தார். அங்கு இந்திய அணி முதலில் கவுதம் கம்பீரின் வீட்டிற்குச் சென்றது. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது வீட்டில் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு இரவு விருந்து அளித்திருந்தார். தகவல்களின்படி, கவுதம் கம்பீரில் வீட்டில் அபிஷேக் சர்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சீக்கிரமாகவே விருந்தை விட்டு வெளியேறியுள்ளார். பரிசோதனையில் வயிற்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதன் பிறகு, கடந்த 2026 பிப்ரவரி 9ம் தேதி அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியா vs நமீபியா போட்டி:
நாளை அதாவது 2026 பிப்ரவரி 12ம் தேதி நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடும் இந்திய லெவன் அணியில் இடம் பெறலாம். இஷான் கிஷனுடன் இன்னிங்ஸைத் தொடங்கலாம். பிசிசிஐ மருத்துவக் குழு தற்போது அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.
ALSO READ: இந்தியாவை முந்திய பாகிஸ்தான் அணி.. தலைகீழாக மாறிய டி20 WC அட்டவணை!
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாட முடியுமா?
வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாட முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் இது உடல்நிலை மற்றும் பரிசோதனையைப் பொறுத்தது. நமீபியாவுக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த போட்டி 2026 பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக மோதுகிறது. இந்தபோட்டியானது கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.