T20 World Cup 2026: கொண்டாட்டத்தின்போது தேசியக்கொடியை அவமதித்தாரா? ஹர்திக் பாண்ட்யா மீது பாய்ந்த புகார்!
Hardik Pandya: 2026 டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டங்களின் போது, இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது காதலியுடன் மேடையில் படுத்துக் கொண்டதாகவும், மூவர்ணக் கொடி அவரது தோள்களில் போர்த்தப்பட்டிருந்ததாகவும், இது தேசியக் கொடியை அவமதிப்பதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) ஏதாவது ஒரு விஷயத்தில் ட்ரெண்டாவார். 2026 டி20 உலகக் கோப்பையில் கடந்த 2026 மார்ச் 8ம் தேதி இந்திய அணி (Indian Cricket Team) சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியுடன் கொண்டாடுவதற்கு பதிலாக தனது காதலி மஹிகா சர்மாவுடன் வெற்றியைக் கொண்டாடினார். இந்திய அணி வீரர்களுடன் நேரத்தை செலவிட்டதை தவிர ஹர்திக் பாண்ட்யா தனது காதலியுடன் புகைப்படம் எடுத்து கொண்டது, முத்தமிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். தற்போது, இந்த விஷயம் காவல் நிலையத்தில் புகாராக எழுந்துள்ளது. அதாவது கொண்டாட்டத்தின் போது ஹர்திக் பாண்ட்யா தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி பெங்களூருவில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: களத்தில் மிட்செல் மேல் பாய்ந்த பந்து.. அசால்ட் செய்த அர்ஷ்தீப்.. அபராதம் விதித்த ஐசிசி!
புகார் அளித்ததன் காரணம் என்ன?
புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வஜேத் கான் பிட்கர் என்பவர் ஹர்திக் பாண்ட்யா மீது புகார் அளித்து, ஹர்திக் பாண்ட்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார். புகாரின்படி, போட்டியை வென்ற பிறகு மைதானத்தில் இந்திய அணி கொண்டாடிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில், ஹர்திக் பாண்ட்யா மைதானத்தில் நடனமாடி ஓடுவதையும், இந்தியக் கொடியை தோள்களில் சுமந்து கொண்டாடுவதையும் காணலாம்.
ஹர்திக் பாண்ட்யா மூவர்ணக் கொடியை எங்கே அவமதித்தார்?
#WATCH | Pune: Advocate Wajid Khan says, “You must have seen the T20 World Cup here. Hardik Pandya was dancing with his girlfriend in celebration of his victory. The national flag was tied to his back… According to Section 2 of the 1971 National Flag Act, we should respect the… pic.twitter.com/mHVHn336ql
— ANI (@ANI) March 12, 2026
டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டங்களின் போது, ஹர்திக் பாண்ட்யா தனது காதலியுடன் மேடையில் படுத்துக் கொண்டதாகவும், மூவர்ணக் கொடி அவரது தோள்களில் போர்த்தப்பட்டிருந்ததாகவும், இது தேசியக் கொடியை அவமதிப்பதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வஜேத் கான் பிட்கர் ANIயிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், ”நீங்கள் டி20 உலகக் கோப்பை கொண்டாட்டத்தின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றியைக் கொண்டாட தனது காதலியுடன் நடனமாடினார். அவர் தனது முதுகில் தேசியக் கொடியைக் கட்டியிருந்தார். 1971 ஆம் ஆண்டு தேசியக் கொடிச் சட்டத்தின் பிரிவு 2 இன் படி, நாம் தேசியக் கொடியை மதிக்க வேண்டும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றியின் கொண்டாட்டத்தில் மிகவும் அளவுக்கு அதிகமாக போனதால், அவர் தனது காதலி அருகில் ஒரே மேடையில் தேசியக் கொடியை அணிந்து படுத்துக் கொண்டார். இது தேசியக் கொடிக்கு அவமானம் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
ALSO READ: யுவராஜ் சிங்கை நீக்க சொன்னாரா தோனி..? முன்னாள் தேர்வாளர் பரபர பேச்சு!
மேலும் இதுகுறித்து பேசிய அவர், ”நான் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளிக்கச் சென்றபோது, சம்பவம் இங்கே அல்ல, அங்குதான் நடந்தது என்று சொன்னார்கள். தேசியக் கொடி முழு நாட்டின் சின்னம் என்றும், சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் என் புகாரை ஏற்றுக்கொண்டு எனக்கு ஒரு நகலை வழங்கினர். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.