DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை – போட்டி ரத்து!

IPL 2025 : ஐபிஎல் 2025ல் 55வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய டெல்லி அணி, ஹைதராபாத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!

பேட் கம்மின்ஸ்

Published: 

05 May 2025 23:39 PM

ஐபிஎல் (IPL) 2025ல் 55வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணிகள் விளையாடி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 4 தோல்வி என புள்ளி பட்டியலில் 5 இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெல்வதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதி செய்துகொள்ள முடியும் மற்றொரு பக்கம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 7 தோல்வி என கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியின் வெற்றி, தோல்வி அந்த அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.

கம்மின்ஸ் அதிரடியால் வீழ்ந்த டெல்லி

இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலிருந்தே பின்னடைவைச் சந்தித்தது. முகமது ஷமி இல்லாத நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் சார்பாக முதல் ஓவரை வீசிய கேப்டன் கம்மின்ஸ், முதல் பந்திலேயே கருண் நாயரின் விக்கெட்டை தூக்கினார். கம்மின்ஸ் தனது அடுத்த இரண்டு ஓவர்களின் முதல் பந்துகளில் ஃபாஃப் டு பிளெசிஸ் (3) மற்றும் அபிஷேக் போரெல் (8) ஆகியோரையும் வெளியேற்றினார். அக்சர் படேலை (6) ஹர்ஷல் படேல் ஆட்டமிழக்கச் செய்தார், கே.எல். ராகுல் (10) ஜெய்தேவ் உனத்கட் பந்தில் வெளியேறினார்.

சரிவிலிருந்து மீட்ட அஷுதோஸ் சர்மா

ஆறாவது விக்கெட்டுக்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் விப்ராஜ் நிகாம் இணைந்து டெல்லி அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டனர். இந்த நிலையில் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த விப்ராஜ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆக அவர்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து களமிறங்கிய அசுதோஷ் சர்மா, சில பெரிய ஷாட்களை அடித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸின் கடைசி ஓவரில் பவுண்டரிகளாக விளாச அந்த அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது. 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த அஷுதோஷ் சர்மா, கடைசி ஓவரில் இஷான் மலிங்காவால் ஆட்டமிழந்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிங்க ஹைதராபாத் அணி தயாரானது. ஆனால் மழை குறுக்கிட்டது. இந்த நிலையில் நீண்ட நேரம் மழை பெய்த படியே இருந்தது. ஒரு கட்டத்தில் மழை விட்டாலும் மைதானத்தில் ஈரப்பதம் குறையவே இல்லை. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இது இரு அணி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது.