IND vs SA Series: ஒருநாள் அணிக்கு கேப்டனாக அவர்.. டி20 அணிக்கு கேப்டனாக இவர்.. இந்திய அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா அறிவிப்பு!
South Africa Squad for India: தென்னாப்பிரிக்காவுக்காக கடைசியாக 2024 டிசம்பரில் விளையாடிய டேவிட் மில்லர் டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். இந்த 2025ம் ஆண்டு ஓய்விலிருந்து திரும்பிய டி காக், அதன் பின்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த ஃபார்மில் உள்ளார்.

டெம்பா பவுமா - எய்டன் மார்க்கரம்
இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணிகளை தென்னாப்பிரிக்கா (IND vs SA ODI Series) அறிவித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்காத அன்ரிச் நார்ட்ஜே டி20 அணிக்குத் திரும்புவதால் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சு பலம் கூடுகிறது. அதன்படி, ஒருநாள் அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாகவும், ஐடன் மார்க்ராம் டி20 அணிக்கு கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு குயின்டன் டி காக் திரும்பியதால், ரியான் ரிக்கில்டன் டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் போட்டியில் டி காக் சதம் அடித்து அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவுக்காக கடைசியாக 2024 டிசம்பரில் விளையாடிய டேவிட் மில்லர் டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். இந்த 2025ம் ஆண்டு ஓய்விலிருந்து திரும்பிய டி காக், அதன் பின்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த ஃபார்மில் உள்ளார்.
தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னெய்ல் பார்ட்மேன், கார்பின் போஷ், மாத்தியூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரூவிஸ், நந்த்ரே பர்கர், குயின்டன் டி காக், டோனி டி ஸோர்ஸி, ரூபின் ஹர்மன், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சன், ஐடன் மார்க்ராம், ரியான் ரிக்கெல், ப்ரீநெலன் சுப்ரெயன்
தென்னாப்பிரிக்கா டி20 அணி:
எய்டன் மார்க்ராம் (கேப்டன்), ஒட்னெய்ல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் ப்ரூவிஸ், குயின்டன் டி காக், டோனி டி ஸோர்ஸி, டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, க்யூனா எம்பாகா, டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி நெகிடி
ALSO READ: ரோஹித், கோலி ரீ-என்ட்ரி.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி எப்படி?
ஒருநாள் தொடர் அட்டவணை
🇿🇦 Proteas Squads for India 🇿🇦
Near full strength squads have been announced for the ODI and T20I series against India
– Anrich Nortje returns to the T20I squad
– Rubin Hermann in the ODI squad, but no Lhuan-dre Pretorius??? 🤨
– David Miller back in the T20I squad pic.twitter.com/Xs6xvKzdFK— Werner (@Werries_) November 21, 2025
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறும். முதல் ஒருநாள் போட்டி 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரிலும், இறுதிப் போட்டி 2025 டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும்.
- 1வது ஒருநாள் போட்டி – 2025 நவம்பர் 30 – ராஞ்சி
- 2வது ஒருநாள் போட்டி – 2025 டிசம்பர் 3 – ராய்ப்பூர்
- மூன்றாவது ஒருநாள் போட்டி – 2025 டிசம்பர் 6 – விசாகப்பட்டினம்
ALSO READ: இந்திய அணிக்கு ஷாக்.. நீக்கப்பட்ட முக்கிய வீரர்.. கவுகாத்தி டெஸ்ட் விவரம்!
டி20 தொடர் அட்டவணை
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2025 டிசம்பர் 9 முதல் 2025 டிசம்பர் 19 வரை நடைபெறும். முதல் போட்டி கட்டாக்கிலும், 2வது போட்டி சண்டிகரிலும், 3வது போட்டி தர்மசாலாவிலும் நடைபெறும். 4வது மற்றும் 5வது டி20 போட்டிகள் முறையே லக்னோ மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும்.
- முதல் டி20 – 2025 டிசம்பர் 9 – கட்டாக்
- 2வது டி20 – 2025 டிசம்பர் 11 – நியூ சண்டிகர்
- 3வது டி20 – 2025 டிசம்பர் 14 – தர்மசாலா
- 4வது டி20 – 2025 டிசம்பர் 17 – லக்னோ
- 5வது டி20 – 2025 டிசம்பர் 19 – அகமதாபாத்