Shivam Dube: அலைமோதிய கூட்டம்.. கிடைக்காத விமானம்.. ரயிலில் பயணித்து வீட்டுக்கு சென்ற சிவம் துபே!

Shivam Dube Travel Train From Ahmedabad to Mumbai: கடந்த 2026 மார்ச் 9ம் தேதி மாலை வரை அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு செல்லும் அனைத்து விமானங்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் சிவம் துபே, அவரது மனைவி அஞ்சும் மற்றும் ஒரு நண்பருடன் ரயிலில் வீட்டிற்கு பயணிக்க முடிவு செய்தார்.

Shivam Dube: அலைமோதிய கூட்டம்.. கிடைக்காத விமானம்.. ரயிலில் பயணித்து வீட்டுக்கு சென்ற சிவம் துபே!

சிவம் துபே

Published: 

11 Mar 2026 16:39 PM

 IST

கடந்த 2026 மார்ச் 8ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்த பட்டத்தை வென்றதில் சஞ்சு சாம்சன் உள்பட பல வீரர்கள் இருந்தபோதிலும், சிவம் துபே மிக முக்கியமான பங்காற்றினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய இன்னிங்ஸின் 20வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்து, சிவம் துபே இந்திய அணியின் (Indian Cricket Team) ஸ்கோரை 250ஐ கடக்க உதவி செய்தார். இது இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்ய மிக முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும், இந்த சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, சிவம் துபேவுக்கு வீட்டிற்கு செல்ல விமானம் எதுவும் கிடைக்காததால் ஒரு கணம் கூட வீணாக்காமல் ரயிலில் தனது வீட்டிற்கு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: களத்தில் மிட்செல் மேல் பாய்ந்த பந்து.. அசால்ட் செய்த அர்ஷ்தீப்.. அபராதம் விதித்த ஐசிசி!

சிவம் துபே ஏன் விமானத்தில் செல்வதற்கு பதிலாக ரயிலில் புறப்பட்டார்?


இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ” கடந்த 2026 மார்ச் 9ம் தேதி மாலை வரை அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு செல்லும் அனைத்து விமானங்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் சிவம் துபே, அவரது மனைவி அஞ்சும் மற்றும் ஒரு நண்பருடன் ரயிலில் வீட்டிற்கு பயணிக்க முடிவு செய்தார். இந்தியாவின் டி20 உலகக் கோப்பை நாயகனான துபே, கூட்டத்தால் சூழப்பட்டிருப்பதன் ஆபத்தை உணர்ந்து, தலையில் கேப், முகத்தில் மாஸ்க் உள்ளிட்டவற்றை அணிந்து மேலே பெர்த்தில் ஏறி படுத்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

ALSO READ: இந்திய அணிக்கு ரூ.131 கோடியை வாரி வழங்கிய பிசிசிஐ.. வீரர்களுக்கு எப்படி பகிர்ந்தளிக்கப்படும்?

கிரிக்கெட் வீரர் சிவம் துபேவா? ஆச்சர்யமாக கேட்ட டிடிஆர்:

அகமதாபாத்-மும்பை சாயாஜி எக்ஸ்பிரஸில் தனது ஏசி மூன்றடுக்கு பெட்டிக்கு ரசிகர்கள் கண்ணில் படாமல் வந்த பிறகு, சிவம் துபே விரைவாக மேல் பெர்த்தில் ஏறி ஒரு போர்வையில் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டார். அப்போது, ​​பயண டிக்கெட் பரிசோதகர் (TTR) டிக்கெட்டை சரிபார்க்க வந்து, “இந்த இருக்கையில் யார்? பயண டிக்கெட்டில் பெயர் சிவம் துபே? இந்திய கிரிக்கெட் வீரரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது சிவம் துபே மனைவி அஞ்சும், “இல்லை, இல்லை. அவர் ஏன் இங்கே வரப்போகிறார்” என்று கேள்வி எழுப்பி மழுப்பியுள்ளார். அதிகப்படியான கூட்டம் காரணமாக டிடிஆர் அங்கிருந்து சென்ற பிறகு, எட்டு மணி நேர பயணத்தின் போது சிவம் துபே சரியாக தூங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சிவம் துபே இரவில் கழிப்பறைக்குச் சென்றார். ஆனால், ரயிலில் யாரும் அவரை அடையாளம் காணவில்லை என்று தெரிகிறது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..