Rohit Sharma’s Records Broken: ரோஹித் சர்மாவின் உலக சாதனை முறியடிப்பு.. டி20யில் கலக்கும் யுஏஇ கேப்டன் முகமது வாசிம்!
T20 World Record: 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை டி20 வடிவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் முகமது வாசிம், டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் மற்றும் அதிக 50+ ஸ்கோர்கள் என்ற ரோஹித் சர்மாவின் இரண்டு உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.

ரோஹித் சர்மா - முகமது வாசிம்
2026ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு, 2025ம் ஆண்டு ஆசியக் கோப்பை (2025 Asia Cup) டி20 வடிவத்தில் நடத்தப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆசியக் கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளின் மழையை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கலாம். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) இருவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால் 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனவே, பல ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக ரோஹித்-விராட் இல்லாமல் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) விளையாட போகிறது, இந்தநிலையில், சமீபத்தில் ரோஹித்தின் சர்மாவின் 2 உலக சாதனையை முறியடிக்கப்பட்டது.
ALSO READ: கவாஸ்கர் முதல் ரோஹித் வரை.. ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய வீரர்கள் பட்டியல்!
டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள்:
டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த உலக சாதனையை ரோஹித் சர்மா வைத்திருக்கிறார்.
ஆசிய கோப்பைக்கு சற்று முன்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் முகமது வாசிம் ரோஹித்தின் ஒரு பெரிய சாதனையை முறியடித்துள்ளார். டி20யில் ரோஹித்தின் ஒன்றல்ல, இரண்டு சாதனைகளை வாசிம் முறியடித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் ஒரு போட்டியில் அவர் இந்த சாதனைகளை முறியடித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது வாசிமின் அணி 189 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் வாசிம் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார், ஆனால் அவரால் தனது அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முகமது வாசிம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் ஒரு கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்ததற்காக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக 105 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அவர் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இப்போது முகமது வாசிம் அவரது சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக வாசிம் இப்போது 110 சிக்ஸர்களை அடித்துள்ளார். இருப்பினும், ஒட்டுமொத்த சிக்ஸர்களைப் பொறுத்தவரை அவர் இன்னும் ரோஹித் சர்மாவை விட பின்தங்கியுள்ளார். டி20யில் முகமது வாசிம் 176 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித் 205 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதிக 50 ப்ளஸ் ஸ்கோர்:
சிக்ஸர்கள் மட்டுமல்ல, அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 16 ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இந்தப் பட்டியலில் பாபர் அசாமுக்குப் பிறகு அவர் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் இப்போது அவர் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இப்போது வாசிம் அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களைப் பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். வாசிம் இப்போது கேப்டனாக 17 ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களைப் பெற்றுள்ளார். பாபர் அசாம் 26 ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:
Muhammad Waseem now holds the record for the most sixes by a T20I captain. pic.twitter.com/shSLBsdfdf
— CricTracker (@Cricketracker) September 1, 2025
- முகமது வாசிம் – 110 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா – 105 சிக்ஸர்கள்
- இயான் மோர்கன் – 86 சிக்ஸர்கள்
- ஆரோன் பின்ச் – 82 சிக்ஸர்கள்
ALSO READ: கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்.. ஆசியக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத டாப் 5 சர்ச்சைகள்!
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ரோஹித்:
இதற்கிடையில் , டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ரோஹித் இப்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். வருகின்ற 2025 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் விளையாடுவதைக் காணலாம். இதற்கு முன், பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் ரோஹித் சர்மாவிற்கு உடற்பயிற்சி சோதனை நடத்தப்பட்டது. ஊடக அறிக்கையின்படி, ரோஹித் இந்த உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.