தென் ஆப்பிரிக்கா தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்? உண்மை என்ன?
IND vs SA ODI Series: காயம் காரணமாக சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு பதிலாக ரோகித் சர்மாவை மீண்டும் ஒடிஐ கேப்டனாக நியமிக்க இந்திய தேர்வுக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ரோகித் சர்மா
இந்திய அணியின் வரவிருக்கும் தென் ஆப்ரிக்கா (South Africa) பயணத்தை முன்னிட்டு, மீண்டும் ஒரு தலைமை மாற்றம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் விரைவில் அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்த நிலையில், காயம் காரணமாக சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு பதிலாக ரோகித் சர்மாவை மீண்டும் ஒடிஐ கேப்டனாக நியமிக்க இந்திய தேர்வுக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ரோகித் சர்மாவின் பெயர் பரிந்துரையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
டிசம்பரில் மூன்று ஒருநாள் போட்டிகள்
இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையில் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. அதன் படி நவம்பர் 30, 2025 அன்று ராஞ்சியில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவிருக்கிறது. அதனையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் வருகிற டிசம்பர் 2, 2025 அன்றும், 3வது ஒருநாள் போட்டி வருகிற டிசம்பர் 6, 2025 அன்று விசாகப்பட்டிணத்திலும் நடைபெறவிருக்கிறது.
இதையும் படிக்க : IND vs SA ODI Series: ரோஹித், கோலி ரீ-என்ட்ரி.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி எப்படி?
மேலும் இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளன. முதல் போட்டி வருகிற டிசம்பர் 9, 2025 அன்று கட்டக்கிலும், இரண்டாவது டி20 போட்டி முள்ளன்பூரில் வருகிற டிசம்பர் 11, 2025 அன்றும், 3வது டி20 போட்டி டிசம்பர் 14, 2025 அன்று தர்மசாலாவிலும், 4வது டி20 போட்டி லக்னோவில் வருகிற டிசம்பர் 17, 2025 அன்றும், 5வது டி20 போட்டி வருகிற டிசம்பர் 19, 2025 அன்று அகமதாபாத்திலும் நடைபெறவிருக்கிறது.
சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் அவதி
இந்தியாவின் புதிய ஒருநாள் போட்டியின் கேப்டனாக சுப்மன் கில் கடந்த அக்டோபர் 2025 மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ் போட்டியின் 2வது நாளில் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அவர் இன்னும் குணமடையாததால் 3 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. அதே போல், இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின்போது காயமடைந்து தொடரில் இருந்து விலகினார்.
இதையும் படிக்க : IND vs SA ODI Series: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!
ரோகித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு?
சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இல்லாத நிலையில், தேர்வுக்குழு ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன்சிப் வழங்க விரும்புவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச்சில் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தும், கடந்த அக்டோபரில் அவர் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்ப்டடார். தற்போது அவர் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகலாம் என்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.