Rohit Sharma: ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைக்க தயார்.. தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா!

India vs Australia Odi Series: கடந்த 2025 ஜூன் மாதம் முதல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும், 2025 ஆசிய கோப்பையின் போது 7 டி20 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. இருப்பினும், ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தீவிரமாக விளையாடாததால், எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை.

Rohit Sharma: ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைக்க தயார்.. தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா

Published: 

13 Oct 2025 18:16 PM

 IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா (Rohit Sharma), கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கு (Champions Trophy 2025) பிறகு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா, தனது சிறந்த பங்களிப்பை வழங்க தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், ரோஹித் சர்மா கடந்த 2025 அக்டோபர் 11ம் தேதி மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் பயிற்சி மேற்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரோஹித் சர்மா பல சிக்ஸர்களை பறக்கவிட்டதை காணலாம். இதன்மூலம், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2025 அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக, மும்பையின் சிவாஜி பார்க்கில் ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு தனது பேட்டிங் திறமையை மேம்படுத்தி கொண்டார். இந்த பயிற்சியானது அவரது நண்பரும், முன்னாள் மும்பை அணி வீரருமான அபிஷேக் நாயரின் கண்காணிப்பில் நடந்தது. தென்னாப்பிரிக்காவில் 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான போட்டிக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் 38 வயதான ரோஹித் சர்மா, ஆல் ஹார்ட் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சியில் பல சிறந்த ஷாட்களை ஆடிய புல் ஷாட்களை வெளிப்படுத்தினார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சில கட் ஷாட்களையும், இன்சைட் – அவுட் ட்ரைவ்களையும் ஆடினார்.

ALSO READ: சர்வதேச போட்டிகளில் ஷாக்! தென்னாப்பிரிக்கா நெம்பி வென்ற நமீபியா..!

சர்வதேச போட்டிகளில் ரோஹித் சர்மா:


ரோஹித் சர்மா கடைசியாக 2025 மார்ச் 9ம் தேதி நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அந்த போட்டியில் அற்புதமான 76 ரன்கள் எடுத்து, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். கடந்த 2025 ஜூன் 1ம் தேதி முதல் ரோஹித் சர்மா எந்த போட்டியிலும் விளையாடவில்லை. கடைசியாக நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான 2வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

ALSO READ: அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு தவறியதா..? சமன்பாடு என்ன சொல்கிறது..?

ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும்:

கடந்த 2025 ஜூன் மாதம் முதல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும், 2025 ஆசிய கோப்பையின் போது 7 டி20 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. இருப்பினும், ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தீவிரமாக விளையாடாததால், எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்திய அணியை டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்து சென்ற பிறகு, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 29 அன்று டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஹித் சர்மா, கடந்த 2025 மே 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.