India vs England Test Series 2025: ஒரே தொடரில் 21 சதங்கள்.. 70 ஆண்டுகால சாதனையை சமன் செய்த இந்தியா – இங்கிலாந்து!

Test Cricket Centuries: 2025ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மொத்தம் 21 சதங்கள் அடிக்கப்பட்டு, 70 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 4 சதங்களுடன் முன்னணியில் உள்ளார். இந்தியா 12 சதங்களுடனும், இங்கிலாந்து 9 சதங்களுடனும் தொடரை முடித்தது.

India vs England Test Series 2025: ஒரே தொடரில் 21 சதங்கள்.. 70 ஆண்டுகால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து

Published: 

04 Aug 2025 12:30 PM

2025ம் ஆண்டு இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் (India – England Test Series) மொத்தம் 21 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த தொடரின் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக உள்ளார். இவர், இதுவரை மொத்தம் 4 சதங்கள் அடித்தார். இருப்பினும், 70 ஆண்டுகால உலக சாதனையை இந்த டெஸ்ட் தொடரால் முறியடிக்கப்படவில்லை. இருப்பினும். இந்தியா மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இணைந்து ஒரு சாதனையை சமன் செய்தனர்.

ALSO READ: அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள்.. இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி..!

இதுவரை 21 சதங்கள்:

சதங்களைப் பொறுத்தவரை, இந்திய வீரர்கள் இங்கிலாந்தை விட முன்னிலையில் உள்ளனர். இந்தத் தொடரில் இந்திய அணி 12 சதங்களை அடித்தது. இங்கிலாந்து வீரர்கள் 9 சதங்களை அடித்தனர். ஓவலில் நடைபெற்று வரும் 5வது டெஸ்டில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்துக்காக ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் சதங்கள் அடித்தனர். 5 டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் முதல் போட்டியில் வந்தன. அதில் இந்தியா இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5 சதங்களையும், இங்கிலாந்து இன்னிங்ஸில் 2 சதங்களையும் அடித்தது.

70 ஆண்டுகால சாதனையை சமன் செய்த பேட்ஸ்மேன்கள்:

1955ம் ஆண்டு ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் 21 சதங்கள் அடிக்கப்பட்டன. அதன் பிறகு, ஒரு தொடரில் இவ்வளவு சதங்கள் அடிக்கப்படவில்லை. ஆனால் இது 2025ம் ஆண்டு இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்தது. புரூக் தொடரின் 20வது சதத்தையும், ஜோ ரூட் 21வது சதத்தையும் அடித்தனர். இருப்பினும், 1955ல் செய்யப்பட்ட 70 ஆண்டுகால சாதனையை முறியடிக்க முடியவில்லை.

ALSO READ: ஃபீல்டிங்கில் அடுத்தடுத்து சொதப்பல்.. வெற்றியை தட்டிவிட்ட இந்திய வீரர்கள்.. கடுப்பான சுப்மன் கில்!

வரலாறு படைத்த இந்திய அணி வீரர்கள்:

இந்திய வீரர்கள் ஒரு டெஸ்ட் தொடரில் 12 சதங்கள் அடித்தது வரலாற்றில் இதுவே முதல் முறை. அதே நேரத்தில், உலக கிரிக்கெட்டில் இது நான்காவது முறையாகும். கேப்டன் சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார். மேலும், கில் அதிகபட்சமாக 269 ரன்கள் எடுத்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸையும் விளையாடியுள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்களின் அடிப்படையில் இந்திய அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை சமன் செய்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்டில் அடித்த சதங்கள்

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101)
  • சுப்மன் கில் (147)
  • ரிஷப் பண்ட் (134)
  • ஓலி போப் (106)
  • கே.எல். ராகுல் (137)
  • ரிஷப் பண்ட் (118)
  • பென் டக்கெட் (149)

இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்டில் அடித்த சதங்கள்

  • சுப்மன் கில் (269)
  • ஹாரி ப்ரூக் (158)
  • ஜேமி ஸ்மித் (184)
  • சுப்மன் கில் (161)

இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்டில் அடித்த சதங்கள்

  • ஜோ ரூட் (104)
  • கே.எல். ராகுல் (100)

இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்டில் அடித்த சதங்கள்

  • ஜோ ரூட் (150)
  • பென் ஸ்டோக்ஸ் (141)
  • சுப்மன் கில் (103)
  • வாஷிங்டன் சுந்தர் (101)
  • ரவீந்திர ஜடேஜா (107)

இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்டில் அடித்த சதங்கள்

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் (118)
  • ஜோ ரூட் (105)
  • ஹாரி ப்ரூக் (111)