CSKvsRR : ராஜஸ்தான் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு – சாதிக்குமா சென்னை?
IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆட விருக்கிறது.

ரியான் பராக் - ருத்துராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆட விருக்கிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்காக முதல் ஆட்டத்தை வெளிப்படுத்தவிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இப்போட்டிக்கு மழை பெய்யுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் போடுவதற்கு முன்பாகவே மழை பெய்தது. போட்டியின் இடையிலும் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியில் சஞ்சு சாம்சன் விளையாடும் இந்தப் முதல் போட்டி, அதுவும் அவர் முன்பு அங்கம் வகித்த அணியான ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராகவே களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
மழை அச்சுறுத்தல்
இதற்கிடையில், இப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. டாஸ் போடுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு மழை பெய்தது. ஆனால், திடீரென மழை நின்றதால் அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது. இருப்பினும், இரவு 8 மணி அளவில் மீண்டும் மழை பெய்யக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அௐஇ வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகின்றன.
இதையும் படிக்க : காத்திருக்கும் 300 ரன்கள்.. சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட்டம் காட்டுவாரா வைபவ் சூர்யவன்ஷி ?
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
Pink and Yellow ready for a classic! 🩷💛
Who is taking the 2️⃣ points home? 🤔
Updates ▶️ https://t.co/UzbuFk5G26#TATAIPL | #KhelBindaas | #RRvCSK | @ParagRiyan | @Ruutu1331 | @rajasthanroyals | @ChennaiIPL pic.twitter.com/9p021tsAXy
— IndianPremierLeague (@IPL) March 30, 2026
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்குச் சென்றுள்ளனர். மற்றொரு பக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய கேப்டன் ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. அதேவேளையில், கடந்த சீசனின் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாகத் தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட், மீண்டும் கேப்டனாக சிஎஸ்கே அணியை வழிநடத்தத் திரும்பியுள்ளார். குவஹாத்தியின் வானிலை தற்போது மழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன; இதனால் போட்டி ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிக்க : IPL 2026: ஜடேஜா vs சஞ்சு.. இடமாறிய களம்! கவுகாத்தியில் ஆதிக்கம் செலுத்துமா சிஎஸ்கே?
அணியின் ஸ்டார் பிளேயரான தல தோனி இல்லாமலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் கால் பகுதியில் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 2 வாரங்களுக்கு ஓய்வில் உள்ளார். அதனால் அடுத்த 6 போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. அது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.