CSKvRR: தோனிக்கு மாற்றாக களமிறங்கும் வீரர் இவரா? எகிறும் எதிர்பார்ப்பு
Who Replaces Dhoni : ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் களமிறங்குகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக எம்.எஸ்.தோனி பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக களமிறங்கும் வீரர் குறித்து எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி மார்ச் 30, 2026 அன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ள இந்த போட்டிக்கு முன் சிஎஸ்கே அணி சில சிக்கல்களை சந்தித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, கால் தசை பிடி்பு காரணமாக முதல் 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அவர் முதல் 6 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
தோனிக்கு மாற்றாக களமிறங்கும் வீரர் இவரா?
இதனால் அவரது இடத்தில் யார் விளையாடுவார் என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய சஞ்சு சாம்சன் இந்த சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதனையடுத்து அவர் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பொறுப்பையும் அவர் ஏற்க வாய்ப்புள்ளது. மேலும் அவர் ருத்துராஜ் கெய்க்வாட் உடன் தொடக்க வீரராகவும் களமிறங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : Rohit Sharma : கொல்கத்தாவை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா.. ஐபிஎல் வரலாற்றில் புது சாதனை!




மேலும் தோனிக்கு மாற்றாக அணியில் மேலும் சில வீரர்கள் பரிசீலனையில் இருக்கின்றனர். அதன் படி இந்த சீசனில் உர்வில் படேல் முதன்மையானவராக இருக்கிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 68 ரன்கள் எடுத்து 212.50 ஸ்டிரைக் ரேட்டுடன் கவனம் ஈர்த்தார். மொத்தமாக டி20 போட்டிகளில் 1425 ரன்கள் எடுத்துள்ள இவர் தனது அதிரடி ஆட்டத்தால் உதவக்கூடியவர்.
அவருக்கு அடுத்து இளம் வீரர் கார்த்திக் சர்மாவும் ஒரு வலுவான தேர்வாக பார்க்கப்படுகிறார். 19 வயதாகும் இவர் ஒரு விக்கெட் கீப்பரும் கூட. இவர் சிக்சர்கள் பறக்க விட்டு சிஎஸ்கே அணியின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் அவரை சிஎஸ்கே அணி ரூ.14.20 கோடி கொடுத்து அணியில் எடுத்துள்ளது. இது அவர் மேல் சிஎஸ்கே வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
இதையும் படிக்க : IPL 2026: சிஎஸ்கே அணிக்கு மற்றொரு சிக்கல்.. காயத்தில் சிக்கிய பிரெவிஸ்..!
மேலும் அவரைத் தொடர்ந்து சர்ஃபாராஸ் கான் ஒரு மாற்றுத் தேர்வாக இருக்கிறார். இதுவரை 50 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 585 ரன்கல் குவித்துள்ளார். தோனியை போலவே நடுப்பகுதியில் இறங்கி சிறந்த ஃபினிஷராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவம் வாய்ந்த ஆட்டம் அணிக்கு பெரிதாக கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனிக்கு பதிலாக யார் களமிறங்கினாலும் அவர்களால் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.