Neeraj Chopra Classic 2025: நீரஜ் சோப்ரா கிளாசிக்கில் கலக்கிய நீரஜ்.. 86.18 மீட்டர் எறிந்து தங்கம் வென்று அசத்தல்!
Neeraj Chopra Wins Gold Medal: பெங்களூருவில் ஜூலை 5, 2025 அன்று நடைபெற்ற நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 86.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். கென்யாவின் ஜூலியஸ் யெகோ வெள்ளி, இலங்கையின் ரமேஷ் பதிரேஜ் வெண்கலம் வென்றனர். நீரஜின் முதல் இரண்டு முயற்சிகள் ஃபவுல் ஆனாலும், மூன்றாவது முயற்சியில் அவர் அசத்தல் வெற்றி பெற்றார்.

நீரஜ் சோப்ரா
பெங்களூருவில் நேற்று அதாவது 2025 ஜூலை 5ம் தேதி நடைபெற்ற நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 (Neeraj Chopra Classic 2025) போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அபார வெற்றியை பதிவு செய்து தங்க பதக்கத்தை வென்றார். பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 வீரர்களை பின்னுக்கு தள்ளி நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) இந்த சாதனையை நிகழ்த்தினார். முதல் சுற்றில் பவுலாக வீசிய நீரஜ் சோப்ரா, தனது மூன்றாவது எறிதலில் 86. 18 மீட்டர் தூரத்தை எறிந்தார். கென்யாவில் ஜூலியஸ் யெகோ 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தையும், இலங்கை ரமேஷ் பதிரேஜ் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அவரது முதல் முயற்சி ஒரு ஃபவுல் பின்னர் 2வது முயற்சியில் அவர் 82.99 மீட்டர் தூரத்தை எட்டினார். 3வது முயற்சி நீரஜ் சோப்ரா முதலிடத்திற்கு கொண்டு வந்தது. அவரது 4வது முயற்சி ஒரு பவுலில் முடிந்தது. நீரஜ் கடைசியாக எடுத்த 2 முயற்சிகள் முறையே 84.07 மற்றும் 85.76 மீட்டர் ஆகும். அதன்படி, நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டிக்கு தற்போது உலக தடகளத்தால் ஏ வகை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 2025 மே 24ம் தேதி ஹரினாவின் பஞ்ச்குலாவில் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், சர்வதேச ஒளிபரப்பாளர்களின் தேவைக்கேற்ப ஏற்பாடுகள் இல்லாததால் அதை பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
நீரஜ் சோப்ரா கிளாசிக்கலில் நீரஜின் செயல்திறன்:
THE GOLD MEDALIST NEERAJ CHOPRA 🏅
– Wins NC Classic 2025 with 86.18m Throw! pic.twitter.com/14ynf42nc9
— The Khel India (@TheKhelIndia) July 5, 2025
- முதல் முயற்சி – ஃபவுல்
- 2வது முயற்சி – 82.99 மீட்டர்
- 3வது முயற்சி – 86.18 மீட்டர்
- 4வது முயற்சி – ஃபவுல்
- 5வது முயற்சி – 84.07 மீட்டர்
- 6வது முயற்சி – 85.76 மீட்டர்
நீரஜ் சோப்ரா கிளாசிக்கில் அனைத்து வீரர்களின் சிறந்த எறிதல்கள்:
- சாஹில் சில்வால் (இந்தியா) – 77.48 மீட்டர்
- ரோஹித் யாதவ் (இந்தியா) – 77.11 மீட்டர்
- மார்ட்டின் கோனெக்னி (செக் குடியரசு) – 71.99 மீட்டர்
- தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி) – 75.85 மீட்டர்
- யஷ்வீர் சிங் (இந்தியா) – 79.65 மீட்டர்
- ஜூலியஸ் யெகோ (கென்யா) – 84.51 மீட்டர்
- சச்சின் யாதவ் (இந்தியா) – 82.33 மீட்டர்
- ரமேஷ் பதிரேஜ் (இலங்கை) – 84.34 மீட்டர்
- சைப்ரியன் மிர்சிக்லோட் (போலந்து) – 79.04 மீட்டர்
- லூயிஸ் மௌரிசியோ டா சில்வா (பிரேசில்) – 80.31 மீட்டர்
- கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) – 82.10 மீட்டர்
- நீரஜ் சோப்ரா (இந்தியா) – 86.18 மீட்டர்