Namibia vs South Africa: சர்வதேச போட்டிகளில் ஷாக்! தென்னாப்பிரிக்கா நெம்பி வென்ற நமீபியா..!

Namibia Beat South Africa: நமீபியா ஒரு ஐசிசி முழு உறுப்பினர் நாட்டை தோற்கடிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு நம்பீயா அணி இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்தை தோற்கடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான் நமீபியாவும் 2026 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Namibia vs South Africa: சர்வதேச போட்டிகளில் ஷாக்! தென்னாப்பிரிக்கா நெம்பி வென்ற நமீபியா..!

நமீபியா கிரிக்கெட் அணி

Published: 

11 Oct 2025 22:27 PM

 IST

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் வலுவான அணிகளாக வலம் வருகிறது. தென்னாப்பிரிக்கா அணியை (South Africa Cricket Team) பொறுத்தவரை சமீபத்தில் நடந்த 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரை வந்தது. இதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், இன்று அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி நடந்த டி20 போட்டியில் நமீபியா (Namibia) தென்னாப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இலக்கை துரத்திய நமீபிய பேட்ஸ்மேன் ஜேன் க்ரீன் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார். டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு கத்துக்குட்டி அணியிடம் தோற்றது இதுவே முதல் முறை.

சர்வதேச போட்டிகளில் கலக்கும் நமீபியா அணி:


நமீபியா ஒரு ஐசிசி முழு உறுப்பினர் நாட்டை தோற்கடிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு நம்பீயா அணி இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்தை தோற்கடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான் நமீபியாவும் 2026 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம கிஃப்ட்! புது காதலியை அறிமுகம் செய்த ஹர்திக் பாண்ட்யா!

போட்டியில் நடந்தது என்ன..?

டொனோவன் ஃபெரீரா தலைமையிலான தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஸ்மித் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதேநேரத்தில், நமீபியா அணிக்காக ரூபன் ட்ரம்பெல்மேன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை துரத்திய நமீபியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் நமீபியா அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பிறகு உள்ளே வந்த நமீபியா விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜேன் கிரீன் தென்னாப்பிரிக்க அணியிடமிருந்து வெற்றியைப் பறித்தார். அழுத்தத்தின் கீழ் களமிறங்கிய கிரீன் 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், ரூபன் ட்ரம்பெல்மேன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ALSO READ: 10வது சதத்துடன் பல்வேறு சாதனைகள்.. இந்திய அணியின் ரன் மெஷினாக சுப்மன் கில்!

கடைசி ஓவரில் 11 ரன்களுடன் திரில்:

கடைசி 6 பந்துகளில் நமீபியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஜான் கிரீன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தென்னாப்பிரிக்க அணியின் மீது அழுத்தத்தை திருப்பினார். இரண்டாவது பந்தில் ஒரு ரன், மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் என அழுத்தம் இங்கும் அங்குமாக சென்றது. தொடர்ந்து, நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்து இரு அணிகளின் ரன் எண்ணிக்கையும் சமமானது. ஐந்தாவது பந்து டாட்டாக அமைய மாற, இது போட்டியை ஒரு பரபரப்பாக மாற்றியது. கடைசி பந்தில் கிரீன் ஒரு பவுண்டரி அடித்து நமீபியாவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.