KKRvsLSG – முதல் சூப்பர் ஓவர் – லக்னோவை வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி
IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் 38வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் ரிங்கு சிங்கின் அதிரடியால் விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மோஷின் கான் - ரிங்கு சிங்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொண்டன. 38வது போட்டியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே இப்போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. கொல்கத்தா அணியின் இன்னிங்ஸ் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அஜிங்கிய ரஹானே மற்றும் டிம் சீஃபர்ட் ஆகிய இருவரும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். வெறும் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்ததால், அணியின் மீதான நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கியது.
வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த அங்கிரிஷ்
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் மீது அதிகரித்தது. இந்த நிலையில் அந்த அணி 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. 9 ரன்கள் எடுத்திருந்த அங்கிரிஷ், Obstructing the Field என்ற முறையில் பீல்டிங்கிற்கு தடையாக இருந்தார் என்ற முறையில் அறிவிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க : IPL 2026: பந்தை பிடிக்க முயற்சி .. என்கிடிக்கு தலையில் பலத்த காயம்.. ரசிகர்கள் ஷாக்!
இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வரலாற்றுச் சாதனையாக அமைந்ததுடன், விளையாட்டு ஆர்வலர்களைப் பெரிதும் திகைக்கச் செய்தது. அங்கிரிஷ் ஆட்டமிழந்த விதம் குறித்து கேகேஆர் அணியின் துணைப் பயிற்சியாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது தொடர்பா அபிஷேக் நாயர் நான்காவது நடுவருடன் காரசாரமான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இருப்பினும், நடுவரால் அதிகாரப்பூர்வமாக ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டதால், அங்கிரிஷ் வேறு வழியின்றி களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரின்ஸ் யாதவ் வீசிய ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தை அங்கிரிஷ் ரகுவன்ஷி மிட்-ஆன் நோக்கி அடித்து விட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது எதிர் திசையில் இருந்த கேமரூன் கிரீன் வேண்டாம் என மறுக்க அவர் பாதியிலேயே பேட்டிங் முனைக்கு திரும்பினார். அவர் ஓடும்போது பந்து அவர் மீது பட்டு வேறு பக்கம் சென்றது. இதனையடுத்து முகமது ஷமி நடுவரிடம் புகார் தெரிவத்தார்.
இதனையடு்து நடுவர்கள் அவரது கோரிக்கையை ஏற்று 3வது நடுவரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் காட்சிகளை ஆய்வு செய்த 3வது நடுவர் அங்கிரிஷ் தனது பாதையை மாற்றியதை கவனித்தார். இதனையடுத்து அவர் அங்கிரிஷ் அவுட் என அறிவித்தார்.
முதல் சூப்பர் ஓவர்
இதனையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ களமிறங்கியது. மிட்ஷெல் மார்ஷ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஏமாற்றமளிக்க, எய்டன் மார்க்ரம் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் அவர்கள் பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை மார்க்ரம் 31 ரன்களுக்கும் ரிஷப் பந்த் 42 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து அந்த அணிக்கு அதன் பிறகு பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கார்த்திக் தியாகி போட்ட கடைசி ஓவரின் பந்தில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் முகமது ஷமி சிக்ஸ் அடிக்க, ஐபிஎல் 2026ன் முதல் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரண், சுனில் நரைன் வீசிய முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். அதன் பிறகு ரிஷப் பந்த் சிங்கிள் அடிக்க, அதன் பிறகு ஸ்டிரைக்கில் வந்த மாரக்ரம், நரேன் வீசிய 3வது பந்தில் தூக்கி அடிக்க, ரிங்கு சிங் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார். இதனையடுத்து சூப்பர் ஓவரில் லக்னோ 1 ரன் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. முதல் பந்திலேயே ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடித்து கொல்கத்தாவை வெற்றி பெறச்செய்தார்.