IPL 2026: ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள்.. காத்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள்.. A-to-Z விவரங்கள் இதோ!
IPL Mini Auction 2026: ஐபிஎல்லில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்கள் தங்கள் அணியில் சேர்த்து கொள்ளலாம். அதேநேரத்தில், இந்த 25 வீரர்களில் ஐபிஎல் அணியில் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம்.

ஐபிஎல் 2026 வெளிநாட்டு வீரர்கள்
ஐபிஎல் 2026 (IPL 2026) தொடங்க இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இருந்தாலும், அதன் எதிர்பார்ப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை. நேற்று அதாவது 2025 நவம்பர் 15ம் தேதி ஐபிஎல்லில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்காக நீண்ட காலமாக விளையாடிய ஆண்ட்ரே ரஸ்ஸல், ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே, டேவிட் மில்லர், ஜோஷ் இங்கிலீஷ், க்ளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டோன், மற்றும் வனிந்து ஹசரங்கா உள்ளிட்ட பல முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக, வருகின்ற ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 78 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏலத்தில் 27 இடங்கள் மட்டுமே உள்ளன. இந்தநிலையில், ஐபிஎல் 2026 மினி ஏலம் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல்லில் 10 அணிகள்:
ஐபிஎல்லில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்கள் தங்கள் அணியில் சேர்த்து கொள்ளலாம். அதேநேரத்தில், இந்த 25 வீரர்களில் ஐபிஎல் அணியில் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம்.
ALSO READ: சூடுபிடிக்கும் ஐபிஎல் 2026.. எந்தெந்த அணிகள் யாரை வெளியிட்டது? முழு பட்டியல் இதோ!
ஐபிஎல் 2026 ஏலத்தில் எத்தனை இடங்கள் ஏலத்தில் எடுக்கப்படும்?
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் சில நாட்களில் பட்டியலிடப்படுவார்கள். 10 அணிகளும் ஒரே எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்டிருப்பதால், அதிகபட்சமாக 77 வீரர்களை வாங்க முடியும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகபட்சமாக 13 வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 21 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்னும் 4 வீரர்கள் மட்டுமே பஞ்சாப் அணிக்கு தேவையாக உள்ளது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு எத்தனை இடங்கள் காலியாக உள்ளன?
ஐபிஎல் 2026 ஏலத்தில் அனைத்து அணிகளிலும் மொத்தம் 27 வெளிநாட்டு வீரர் இடங்கள் உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் காலியாக உள்ள வெளிநாட்டு வீரர்களின் பட்டியலை தெரிந்துகொள்வோம்.
- சென்னை சூப்பர் கிங்ஸ்: 9 (4 வெளிநாட்டு)
- மும்பை இந்தியன்ஸ்: 5 (1 வெளிநாட்டு)
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 13 (6 வெளிநாட்டு)
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 8 (2 வெளிநாட்டு)
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 10 (2 வெளிநாட்டு)
- குஜராத் டைட்டன்ஸ்: 5 (வெளிநாட்டில்)
- ராஜஸ்தான் ராயல்ஸ்: 9 (1 வெளிநாட்டு)
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 6 (4 வெளிநாடுகள்)
- டெல்லி கேபிடல்ஸ்: 8 (5 வெளிநாடுகள்)
- பஞ்சாப் கிங்ஸ்: 4 (2 வெளிநாட்டு)
ALSO READ: கொல்கத்தா அணியிடம் கொட்டிகிடக்கும் பணம்.. மற்ற அணிகளின் பர்ஸ் பேலன்ஸ் என்ன..? முழு விவரம்!
2026 ஐபிஎல் ஏலம் எப்போது நடைபெறும்?
ஐபிஎல் 2026க்கான ஏலம் டிசம்பர் 16, 2025 அன்று நடைபெறும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மினி ஏலமானது அபுதாபியில் நடைபெறும்.