IPL 2026: மினி ஏலத்தில் 1355 வீரர்கள் பதிவு.. தூக்க காத்திருக்கும் அணிகள்.. பிசிசிஐ விரைவில் பட்டியல் வெளியீடு!
IPL Mini Auction 2026: ஐபிஎல் 2026க்கான மினி ஏலத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பல சர்வதேச வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், மேத்யூ ஷார்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலம் 2025
2026 இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) வருகின்ற 2026ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் (IPL Mini Auction 2026) விரைவில் நடைபெறவுள்ளது. அதன்படி, வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்த முறை, இந்தியாவைச் சேர்ந்த பல உள்நாட்டு நட்சத்திரங்களுடன், உலகெங்கிலும் உள்ள சிறந்த சர்வதேச வீரர்களும் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதனால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ALSO READ: 67 வீராங்கனைகள்.. 5 அணிகளில் ஐக்கியம்.. நடந்து முடிந்த 2026 மகளிர் பிரீமியர் லீக் மெகா ஏலம்!
இந்திய வீரர்கள் அதிகளவில் பதிவு:
இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் மயங்க் அகர்வால், கே.எஸ். பரத், ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், பிருத்வி ஷா, சிவம் மாவி, நவ்தீப் சைனி, சேதன் சகாரியா மற்றும் ராகுல் திரிபாதி போன்ற அனுபவ மற்றும் இளம் வீரர்களின் பெயர்களை அணிகள் குறிவைக்கலாம். இவர்களின் திறன்களின் அடிப்படையில், புதிய சீசனில் ஒரு வலுவான அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வீரர்களின் அடிப்படை விலைகளுடன் கூடிய அதிகாரப்பூர்வ பட்டியலை பிசிசிஐ அறிவிக்கும்.
வெளிநாட்டு வீரர்களில் யார் யார் பதிவு?
🚨 IPL 2026 ₹2CR GANG IS INSANE 🚨
Green ✅ Rachin ✅ Hasaranga ✅ Pathirana ✅ Livingstone ✅ JFM ✅ Bishnoi ✅
Same price as Steven Smith & Devon Conway 😭
Absolute robbery incoming. Who’s the biggest steal? #IPL2026 #IPLAuction pic.twitter.com/aB3v4KzTZy
— Er.Rajiv (@Rajiv_siait) December 2, 2025
ஐபிஎல் 2026க்கான மினி ஏலத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பல சர்வதேச வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், மேத்யூ ஷார்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 மற்றும் 25 சீசன்களில் எந்த அணியும் வாங்காத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் பதிவு செய்துள்ளார். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான ஆஸ்திரேலியாவின் டி20 அணியில் மீண்டும் அடம்பிடிக்க ஸ்டீவ் ஸ்மித்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
அதேபோல், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸும் பதிவு பட்டியலில் உள்ளார். அவரது திருமணம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டாலும், ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவருக்கு அணிகள் அதிக தொகையை செலவிடலாம்.
எந்த அணியிடம் மிகப்பெரிய பர்ஸ் உள்ளது?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ஏலத்திற்கு முன்னதாக அதிக திறன் கொண்ட அணியாக உள்ளது. ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் உட்பட பல முக்கிய வீரர்களை விடுவித்து, அதிக தொகையை கையில் வைத்துள்ளது. ரஸ்ஸல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், KKR அணியின் பவர் பயிற்சியாளராக தொடர்ந்து பணியாற்றுவார்.
ALSO READ: ஐபிஎல் ஆட்டம் இனி இல்லை – ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.!
ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மற்றும் விஜய் சங்கர் போன்ற வீரர்களை விடுவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மிக அருகில் உள்ளது. சுவாரஸ்யமாக, சென்னை அணி மதிஷா பதிரானாவையும் விடுவித்தது. மேலும் அவரை ஏலத்தில் மீண்டும் வாங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.