IPL 2026: காயங்கள் காரணமாக விலகும் வீரர்கள் – சிஎஸ்கேவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

CSK vs RR : ஐபிஎல் 2026 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்களான எம்.எஸ்.தோனி, நாதன் எல்லிஸ் மற்றும் பிரேவிஸ் ஆகியோர் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2026: காயங்கள் காரணமாக விலகும் வீரர்கள் - சிஎஸ்கேவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ருத்துராஜ் கெய்க்வாட் - ரியான் பராக்

Updated On: 

30 Mar 2026 15:56 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் மார்ச் 30, 2026 அண அன்று நடைபெறும் முக்கிய போட்டியில்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. கடந்த சீசனில் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில்  கடைசி இடத்தை பிடித்திருந்தன. இதனால் இந்த சீசனில் இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.  ஐபிஎல் போட்டியின் முதல் சாம்பியனான ராஜஸ்தான்  மற்றும் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்கஸ் இரண்டும் இந்த போட்டியை ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பலம் அதன் பேட்டிங் லைன் அப் தான். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்து அந்த அணிக்கு வலுவான துவக்கம் தர காத்திருக்கின்றனர்.  நடுப்பகுதியில் ரியான் பராக், சிமர்ன் ஹெட்மயர் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து அந்த அணியின் ஸ்கோரை வலுவாக உயர்த்த காத்திருக்கின்றனர். வேகப்பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆச்சர், நண்ட்ரே புர்கர், சந்தீப் சர்மா ஆகியோர் சிறந்த ஃபார்மில் இறுக்கின்றனர். சாம் கரண் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : IPL 2026: சிஎஸ்கே அணிக்கு மற்றொரு சிக்கல்.. காயத்தில் சிக்கிய பிரெவிஸ்..!

சிஎஸ்கேவில் காயம் காரணமாக விலகும் வீரர்கள்

மறுபுறம் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் பெரிய சவாலாக இருக்கின்றன. எம்.எஸ்.தோனி கால்வலி காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது என கூறப்படுகிறது.. மேலும், நாதன் எல்லிஸ் காயம் காரணமாக முழு சீசனிலிருந்தும் வெளியேறியுள்ளார். அதேபோல்  பிரவெஸ் இன்றைய போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே  போன்ற வீரர்கள் அணிக்கு வலுவான அடித்ததளம் அமைக்கவுள்ளனர்.  மேலும், இறுதி ஓவர்களில் யார் பவுலிங் செய்வார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

ரியான் பராக்  தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி 19 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றுள்ளது. இது ஒப்பீட்டளவில் சிஎஸ்கேவுக்கு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : IPL 2026: முதலில் பந்துவீசும் மும்பை.. பேட்டிங்கில் அதிரடி காட்டுவார்களா கொல்கத்தா?

குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால், கலீல் அகமத்துக்கு எதிராக  28 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,  இன்றைய போட்டியிலும் அவர் தனது அதிரடியை தொடர்வார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.  மேலும் சிம்ரன் ஹெட்மயரும் கலீல் அகமத்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதே போல சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக 72 ரன்கள் எடுத்துள்ளதால், இன்றைய போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இரு அணிகளும் புதிய மாற்றங்களுடன் இந்த சீசனை தொடங்குகின்றன. அணியில் ஏற்பட்டுள்ள காயங்கள் சிஎஸ்கே அணியை பாதித்தாலும், அனுபவம் அவர்களுக்கு பலமாக இருக்கும். எனவே இந்த போட்டி கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..