IPL 2026: ஹைதராபாத் அணியில் இணையும் பேட் கம்மின்ஸ்.. வலு பெறும் பந்துவீச்சு டிபார்ட்மெண்ட்!

Pat Cummins Returns: ஜெய்தேவ் உனத்கட் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இல்லை. பிரஃபுல் ஹிஞ்ச் மற்றும் ஷகிப் ஹொசைன் ஆகியோர் தங்களது ஐபிஎல் அறிமுகப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், ஹைதராபாத்தின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலில் அனுபவமின்மை தெளிவாகத் தெரிகிறது. அதன்படி, பேட் கம்மின்ஸ் இணைந்தால் பந்துவீச்சில் ஹைதராபாத் அணி வலுபெறலாம்.

IPL 2026: ஹைதராபாத் அணியில் இணையும் பேட் கம்மின்ஸ்.. வலு பெறும் பந்துவீச்சு டிபார்ட்மெண்ட்!

பேட் கம்மின்ஸ்

Updated On: 

18 Apr 2026 15:54 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) தொடர்ச்சியான கெட்ட செய்திகளுக்கு மத்தியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பேட் கம்மின்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார். முதுகு காயத்தால் அவதிப்பட்டு வந்த பேட் கம்மின்ஸ், இறுதிப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். அதன்படி, ஹைதராபாத் அணியின் வழக்கமான கேப்டனான கம்மின்ஸ், இன்று அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி வேகப்பந்து வீச்சுத் துறையில் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. பிரைடன் கார்ஸ் மற்றும் டேவிட் பெயின் ஆகியோர் காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் ஹைதராபாத் அணிக்காக விளையாட மாட்டார்கள்.

ஜெய்தேவ் உனத்கட் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இல்லை. பிரஃபுல் ஹிஞ்ச் மற்றும் ஷகிப் ஹொசைன் ஆகியோர் தங்களது ஐபிஎல் அறிமுகப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், ஹைதராபாத்தின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலில் அனுபவமின்மை தெளிவாகத் தெரிகிறது. அதன்படி, பேட் கம்மின்ஸ் இணைந்தால் பந்துவீச்சில் ஹைதராபாத் அணி வலுபெறலாம்.

ALSO READ: முன்னேறும் குஜராத் அணி.. சிஎஸ்கே, ஆர்சிபி நிலை என்ன? ஐபிஎல் புள்ளி பட்டியல்!

முதல் போட்டி எப்போது நடைபெறும்?

பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்தால் , அவர் உடனடியாக தனது முதல் போட்டியில் விளையாடுவாரா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று அதாவது 2026 ஏப்ரல் 18ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஆனால் கம்மின்ஸ் அந்தப் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. வருகின்ற 2026 ஏப்ரல் 25 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவதே தனது இலக்கு என்று அவர் சமீபத்தில் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார். இதன் பொருள், கம்மின்ஸ் இல்லாமல் ஹைதராபாத் அணி மேலும் 2 போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும். கம்மின்ஸ் இல்லாத நிலையில், இஷான் கிஷன் அணியை வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் அணியின் செயல்பாடு கலவையாகவே இருந்து வருகிறது.

ALSO READ: ஹைதராபாத்தில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி? – வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் செயல்பாடு எப்படி உள்ளது?

ஐபிஎல் 2026 புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4வது இடத்தில் இருந்தாலும், அவர்களின் ஆட்டத்தில் உள்ள நிலையற்ற தன்மை தெளிவாகத் தெரிகிறது. 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி வெறும் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. தங்களின் கடைசிப் போட்டியில், பிரஃபுல் ஹிங்கே மற்றும் ஷகிப் ஹொசைன் ஆகியோருக்கு ஐபிஎல் அறிமுக வாய்ப்பை வழங்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தது. இருப்புனும், அந்த முயற்சி வெற்றி பெற்றது.ஏனெனில் அந்த இரண்டு இளம் வீரர்களும் இணைந்து மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் பேட்டிங்கைச் சிதைத்தனர். இப்போது, ​​சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி தங்களின் வெற்றிப் பயணத்தைத் தொடர அவர்கள் முனைவார்கள்.

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..