IPL 2026: சிஎஸ்கேக்கு செல்லும் சஞ்சு.. முக்கிய நிர்வாகி கொடுத்த சூப்பர் அப்டேட்!

Sanju Samson Trade Rumors: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2026 ஐபிஎல் சீசனுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது. கடந்த சீசனில் ஏமாற்றம் அடைந்த அணி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சனை தங்களது அணியில் சேர்க்க ஆர்வமாக உள்ளது.

IPL 2026: சிஎஸ்கேக்கு செல்லும் சஞ்சு.. முக்கிய நிர்வாகி கொடுத்த சூப்பர் அப்டேட்!

சஞ்சு சாம்சன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

Published: 

02 Jul 2025 08:11 AM

கடந்த 2025 ஜூன் 3ம் தேதி ஐபிஎல் போட்டிகள் முடிந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுக்கு அடுத்த சீசனுக்கான தயாரிப்புகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடந்த 17 ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை. இந்த முறையும் அணியின் செயல்திறன் சிறப்பாக இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) உள்பட பல நட்சத்திர வீரர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 2026 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது அணியை முற்றிலும் மாற்ற திட்டமிட்டுள்ளது. கிடைத்த தகவலின்படி, வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து குறைந்தது 6 வீரர்களை பரிமாறிக்கொள்ள ஆபர்கள் வந்துள்ளன.

சென்னை அணியில் சஞ்சு சாம்சனா..?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணையலாம் என்று சென்னை அணியின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “சஞ்சு சாம்சனை நாங்கள் நிச்சயமாகப் பரிசீலித்து வருகிறோம். சஞ்சு சாம்சன் ஒரு இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பிங் மற்றும் தொடக்க பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடக்கூடியவர். சஞ்சு கிடைத்தால், நிச்சயமாக அவரை எங்கள் அணியில் சேர்க்க விரும்புகிறோம். இந்த விஷயம் அவ்வளவு உயரத்திற்குச் செல்லாததால், அவருடன் யார் வர்த்தகம் செய்வது என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அவரை எங்கள் அணியில் சேர்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலும், இந்தியன் பிரீமியர் லீக்கிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். சஞ்சு சாம்சன் கடந்த சில ஐபிஎல் சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இப்போது, சஞ்சு சாம்சன் ஐபிஎல் 2026ல் வேறொரு அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2025 சீசன் சஞ்சுக்கு எப்படி அமைந்தது..?

ஐபிஎல் 2025 சீசன் சஞ்சு சாம்சனுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இவரது கேப்டன்ஷிக்கு கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பிளேஆஃப்களுக்குள் நுழைய முடியவில்லை. ஐபிஎல் 2025 சீசனில் சஞ்சு சாம்சன் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 285 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 66 ரன்கள் ஆகும்.

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக செயல்பட்டது. அதன் பிறகு மகேந்திர சிங் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை தங்கள் அணியில் சேர்த்தால், அவர் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் சிஎஸ்கே அணிக்கு முக்கிய பங்கு வகிக்க முடியும்.