IPL 2026: இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே.. புது வரலாறு படைக்கப்போகும் வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Sooryavanshi Record: அனைத்து விதமான டி20 கிரிக்கெட் வடிவங்களையும் சேர்த்து பொல்லார்ட் தனது 100 சிக்ஸர்களை 843 பந்துகளில் நிறைவு செய்துள்ளார். பொல்லார்ட்டின் சாதனையை எட்டுவதற்கு வைபவ் இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவையாக உள்ளது. பொல்லார்ட்டுக்கு பல போட்டிகளுக்கு முன்பே வைபவ் சூர்யவன்ஷி 99 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

IPL 2026: இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே.. புது வரலாறு படைக்கப்போகும் வைபவ் சூர்யவன்ஷி!

வைபவ் சூர்யவன்ஷி!

Published: 

30 Apr 2026 20:24 PM

 IST

ஐபிஎல் 19வது சீசனில் (IPL 2026) ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி இதுவரை அபாரமாக விளையாடி வருகிறது. ராஜஸ்தான் அணி ஆடிய 9 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணியின் வீரர்களும் ராஜஸ்தானின் வெற்றிக்குப் பங்களித்துள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய தொடக்க ஜோடி, ராஜஸ்தான் ராயல்ஸூக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் 2வது சீசனிலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். அதேபோல், வைபவ் சூர்யவன்ஷி ஒவ்வொரு போட்டியிலும்  சில சாதனைகளை முறியடித்து வருகிறார். வெறும் 14 வயதிலேயே அறிமுகமான வைபவ், ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இதற்கிடையில், வைபவ் சூர்யவன்ஷி முன்னாள் ஜாம்பவானின் சாதனையை முறியடித்து ஒரு உலக சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ALSO READ: இ-சிகரெட் பயன்பாடு.. ரியான் பராக் மீது ஆக்‌ஷன் எடுத்த பிசிசிஐ!

வைபவ் 100 டி20 சிக்ஸர்களை அடிப்பாரா?

19-வது சீசனின் ராஜஸ்தானின் 10-வது போட்டியானது வருகின்ற 2026 மே 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடும். இந்தப் போட்டியில் ஒரு சிக்ஸர் அடிப்பதன் மூலம் கீரன் பொல்லார்டின் உலக சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு உள்ளது. டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி இலக்காகக் கொண்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்தவர் பொல்லார்ட்:

அனைத்து விதமான டி20 கிரிக்கெட் வடிவங்களையும் சேர்த்து பொல்லார்ட் தனது 100 சிக்ஸர்களை 843 பந்துகளில் நிறைவு செய்துள்ளார். பொல்லார்ட்டின் சாதனையை எட்டுவதற்கு வைபவ் இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவையாக உள்ளது. பொல்லார்ட்டுக்கு பல போட்டிகளுக்கு முன்பே வைபவ் சூர்யவன்ஷி 99 சிக்ஸர்களை அடித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி 27 டி20 இன்னிங்ஸ்களில் 99 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதற்காக அவர் 511 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். வைபவிற்கும் பொல்லார்டிற்கும் இடையே 332 பந்துகள் வித்தியாசம் உள்ளது. எனவே, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் வைபவின் முதல் சாதனை சிக்ஸருக்காகக் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் 2026-ல் அதிக சிக்ஸர்கள்:

ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தன்வசம் வைத்துள்ளார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி 37 சிக்ஸர்களை அடித்துள்ளார். ராஜஸ்தானின் சிறப்பான செயல்பாட்டால், விரைவில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ராஜஸ்தான் பிளேஆஃப்களுக்கும் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்றொரு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனின் சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு வாய்ப்புள்ளது.

ALSO READ: கடைசி 3 இடங்களில் KKR, MI, LSG.. பிளே ஆஃப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்..?

ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை கிறிஸ் கெய்லிடம் உள்ளது. கெய்ல் கடந்த 2012ம் ஆண்டு 59 சிக்ஸர்களை அடித்தார். இதன்பிறகு, இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை. எனவே, 2011-ல் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி, கெய்லின் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..