IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்.. ஆதிக்கம் செலுத்தும் கோலி – ஏபிடி கூட்டணி!

IPL Highest Partnerships: ஆர்சிபி வீரர் விராட் கோலி உள்ளிட்ட பல வீரர்கள் அதிக சதங்களும், சாஹல் போன்ற வீரர்கள் அதிக விக்கெட்டுகளையும் எடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் போட்டியின் போக்கையே மாற்றியமைத்த 2 பேட்ஸ்மேன்கள் சாதனை பார்ட்னர்ஷிப்கள் அமைந்த ஏராளமான போட்டிகளைக் கண்டுள்ளது.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்.. ஆதிக்கம் செலுத்தும் கோலி - ஏபிடி கூட்டணி!

ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்

Published: 

15 Mar 2026 15:59 PM

 IST

உலகின் மிகப்பெரிய டி20 லீக்குகளில் ஒன்றான 2026 ஐபிஎல் சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. கடந்த 18 சீசன்களில் இதுவரை பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஆர்சிபி வீரர் விராட் கோலி உள்ளிட்ட பல வீரர்கள் அதிக சதங்களும், சாஹல் போன்ற வீரர்கள் அதிக விக்கெட்டுகளையும் எடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் போட்டியின் போக்கையே மாற்றியமைத்த 2 பேட்ஸ்மேன்கள் சாதனை பார்ட்னர்ஷிப்கள் அமைந்த ஏராளமான போட்டிகளைக் கண்டுள்ளது. ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன், ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த 5 சிறந்த பார்ட்னர்ஷிப்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: முதல் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்கிறதா சிஸ்கே? லீக்கான ஐபிஎல் 2026 லீக் அட்டவணை அப்டேட்!

விராட் கோலி – ஏபி டி வில்லியர்ஸ் (229 ரன்கள்)

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் பெயர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2016 மே 14ம் தேதி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் 2வது விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தனர். இந்த பார்ட்னர்ஷிப் ஐபிஎல்லில் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

விராட் கோலி – ஏபி டி வில்லியர்ஸ் (215* ரன்கள்)

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் பட்டியலில் இந்த ஜோடியே இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மே 10ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

கேஎல் ராகுல் – குயின்டன் டி காக் (210* ரன்கள்)

இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஜோடி மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே 18ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் போது, ​​கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஜோடி ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்தது.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசன் இந்த 4 வீரர்களுக்கு கடைசியா? கடந்த சீசனில் செயல்திறன் எப்படி?

சுப்மன் கில் – சாய் சுதர்ஷன் (210 ரன்கள்)

இந்தப் பட்டியலில் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் நான்காவது இடத்தில் உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு மே 10ம் தேதி அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி 210 ரன்கள் சேர்த்தது.

ஷான் மார்ஷ் – ஆடம் கில்கிறிஸ்ட் (206 ரன்கள்)

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஷான் மார்ஷ் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஜோடி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மே 17ம் தேதி தர்மசாலாவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷான் மார்ஷ் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஜோடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தனர்.

Follow Us
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக செல்லலாம் - அனுமதி வழங்கிய ஈரான்
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்காவில் 400 ஆண்டுகள் சிறை தண்டனை
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - இன்ஃபோசிஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு