IPL 2026 Schedule: ஐபிஎல் 2026 சீசன் எப்போது தொடக்கம்..? போட்டியின் நேரம் என்ன?

IPL 2026 Full Schedule in Tamil: ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டி அட்டவணை 2026 மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 தொடருக்காக இன்னும் 54 போட்டிகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026 Schedule: ஐபிஎல் 2026 சீசன் எப்போது தொடக்கம்..? போட்டியின் நேரம் என்ன?

ஐபிஎல் 2026 அட்டவணை

Published: 

25 Mar 2026 17:07 PM

 IST

ஐபிஎல் 2026-ன் (IPL 2026) முதல் கட்டத்திற்கான போட்டி அட்டவணை மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தனது 19-வது சீசனின் தொடக்கப் போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்தது. அதன்படி, வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கி, முதல் கட்டம் 2026 ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும். இந்த சீசனின் முதல் போட்டி வருகின்ற மார்ச் 28 அன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. இம்முறை, பெங்களூரு அணி தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள முனையும். கடந்த 2025 ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது. தொடக்கப் போட்டிக்கு அடுத்த நாளான 2026 மார்ச் 29ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும்.

ALSO READ: ஐபிஎல் 2026ல் அதிக வயதுடைய வீரர்கள்.. பட்டியலில் ரோஹித், கோலி!

இதுவரை அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணை:

  1. 2026 மார்ச் 28 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பெங்களூரு (இரவு 7.30 மணி)
  2. 2026 மார்ச் 29 – மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை (இரவு 7.30 மணி)
  3. 2026 மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கவுகாத்தி (இரவு 7.30 மணி)
  4. 2026 மார்ச் 31 – பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – புது சண்டிகர் (இரவு 7.30 மணி)
  5. 2026 ஏப்ரல் 1 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – லக்னோ (இரவு 7.30 மணி)
  6. 2026 ஏப்ரல் 2 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா(இரவு 7.30 மணி)
  7. 2026 ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை (இரவு 7.30 மணி)
  8. 2026 ஏப்ரல் 4 – டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – டெல்லி (மாலை 3 மணி)
  9. 2026 ஏப்ரல் 4 – குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – அகமதாபாத் (இரவு 7.30 மணி)
  10. 2026 ஏப்ரல் 5 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஹைதராபாத் (மாலை 3 மணி)
  11. 2026 ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு (இரவு 7.30 மணி)
  12. 2026 ஏப்ரல் 6 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா (இரவு 7.30 மணி)
  13. 2026 ஏப்ரல் 7 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – கவுகாத்தி (இரவு 7.30 மணி)
  14. 2026 ஏப்ரல் 8 – டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி (இரவு 7.30 மணி)
  15. 2026 ஏப்ரல் 9 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா (இரவு 7.30 மணி)
  16. 2026 ஏப்ரல் 10 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கவுகாத்தி (இரவு 7.30 மணி)
  17. 2026 ஏப்ரல் 11 – பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – புதிய சண்டிகர் (மாலை 3 மணி)
  18. 2026 ஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – சென்னை (இரவு 7.30 மணி)
  19. 2026 ஏப்ரல் 12 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ (மாலை 3 மணி)
  20. 2026 ஏப்ரல் 12 – மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை (இரவு 7.30 மணி)

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. டாப் 2வில் மும்பை, பெங்களூரு!

கிடைத்த தகவல்களின்படி, மீதமுள்ள போட்டி அட்டவணை 2026 மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 தொடருக்காக இன்னும் 54 போட்டிகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்