IPL 2026: மும்பை vs டெல்லி.. குஜராத் vs ராஜஸ்தான்.. ஒரே நாளில் இன்று 2 போட்டிகள்!

DC vs MI - GT vs RR: ஐபிஎல் 2026 சீசனின் இன்று அதாவது 2026 ஏப்ரல் 4 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மதியம் 3 மணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரவு 7 மணிக்கும் மோதுகின்றன.

IPL 2026: மும்பை vs டெல்லி.. குஜராத் vs ராஜஸ்தான்.. ஒரே நாளில் இன்று 2 போட்டிகள்!

ஐபிஎல்லில் 2 போட்டிகள்

Published: 

04 Apr 2026 08:00 AM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 8வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 4 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மதியம் 3.30 மணிக்கு மோதுகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. தங்களது முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை (Kolkata Knight Riders) 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லி, தங்களது தொடக்கப் போட்டியில் லக்னோ அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தற்போது புள்ளி அட்டவணையில் மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் இந்தப் போட்டியில் தங்களின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ய முனையும்.

ALSO READ: பொதுவெளியில் கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு.. யுவராஜ் சிங் வருத்தப்பட்ட காரணம் என்ன?

நேருக்கு நேர் சாதனை:

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆடும் XI:

கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), பாத்தும் நிசாங்கா, நிதிஷ் ராணா, அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், விப்ராஜ் நிகம், லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி நடராஜன், முகேஷ் குமார்

மும்பை இந்தியன்ஸ் ஆடும் XI:

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், நமன் தீர், ஷர்துல் தாக்கூர், மயங்க் மார்கண்டே, ஏஎம் கசன்ஃபர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்:

இந்தியன் பிரீமியர் லீக் 2026-ன் ஒன்பதாவது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரவு 7 மணிக்கு மோதுகிறது. ஐபிஎல் 2026-ன் முதல் போட்டியில், குஜராத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ஒரு பரபரப்பான தோல்வியைச் சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்கப் போட்டியில், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இடையே 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸை விட குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சற்று சாதகம் உள்ளது. எட்டு போட்டிகளில் டைட்டன்ஸ் அணி ஆறிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ் ஆடும் 11:

சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, அசோக் சர்மா, முகமது சிராஜ்.

ALSO READ: முதல் வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத்.. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் 11:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா.

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.