IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் பர்ப்பிள் கேப்.. ஆதிக்கம் செலுத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

IPL Purple Cap Winners List: கடந்த 18 சீசன்களில், மொத்தம் 15 பந்துவீச்சாளர்கள் பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் மட்டுமே 2 முறை பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர்.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் பர்ப்பிள் கேப்.. ஆதிக்கம் செலுத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

பர்ப்பிள் கேப் வின்னர்ஸ்

Published: 

22 Mar 2026 14:52 PM

 IST

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) தொடங்கி 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஐபிஎல்-இன் 19-வது சீசனானது வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த 19 ஆண்டுகளில், ஐபிஎல் வரலாற்றில் பல எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன. சிலர் அதிக ரன்களும், மற்றவர்கள் அதிக சதங்களை அடுக்கடுக்காக அடித்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு சீசனிலும் பர்ப்பிள் கேப் வென்ற பந்துவீச்சாளர்கள் (Bowlers) பட்டியல் இதோ. அந்தவகையில் இதுவரை, 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே 2 முறை பர்ப்பிள் கேப் வென்றுள்ளனர்.

கடந்த 18 சீசன்களில், மொத்தம் 15 பந்துவீச்சாளர்கள் பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் மட்டுமே 2 முறை பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர். இதுமட்டுமின்றி மோஹித் சர்மா, லசித் மலிங்கா மற்றும் சோஹைல் தன்வீர் உள்ளிட்ட பல பந்துவீச்சாளர்களும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ALSO READ: ஒரு ஓவரில் 37 ரன்கள்.. ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 5 பந்துவீச்சாளர்கள்..!

ஆண்டு வாரியாக பர்ப்பிள் கேப் வென்றவர்களின் பட்டியல்:

  1. 2008 – சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  2. 2009 – ஆர்.பி. சிங் (டெக்கான் சார்ஜர்ஸ்)
  3. 2010 – பிரக்யான் ஓஜா (டெக்கான் சார்ஜர்ஸ்)
  4. 2011 – லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்)
  5. 2012 – மோர்னே மோர்கெல் (டெல்லி டேர்டெவில்ஸ்)
  6. 2013 – டுவைன் பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  7. 2014 – மோஹித் ஷர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  8. 2015 – டுவைன் பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  9. 2016 – புவனேஷ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  10. 2017 – புவனேஷ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  11. 2018 – ஆண்ட்ரூ டை (பஞ்சாப் கிங்ஸ்)
  12. 2019 – இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  13. 2020 – ககிசோ ரபாடா (டெல்லி கேபிடல்ஸ்)
  14. 2021 – ஹர்ஷல் படேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ)
  15. 2022 – யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  16. 2023 – முகமது ஷமி (குஜராத் டைட்டன்ஸ்)
  17. 2024 – ஹர்ஷல் படேல் (பஞ்சாப் கிங்ஸ்)
  18. 2025 – பிரசித் கிருஷ்ணா (குஜராத் டைட்டன்ஸ்)

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம்.. டாப் 2 பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி!

பிராவோ, ரபாடா மற்றும் ஹர்ஷல் சரித்திரம்:

ஐபிஎல் வரலாற்றில், ஒரே சீசனில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள் இதுவரை 3 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டுவைன் பிராவோ 32 விக்கெட்டுகளை எடுத்தார். இது ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்ததற்கான சாதனையாக இன்றும் உள்ளது. 2020ம் ஆண்டு ககிசோ ரபாடா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 30 விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் 2021ம் ஆண்டு ஹர்ஷல் படேல் 32 விக்கெட்டுகளை எடுத்து டுவைன் பிராவோவின் சாதனையை சமன் செய்தார். வேறு எந்த பந்துவீச்சாளரும் ஒரே சீசனில் 30 விக்கெட்டுகளை எடுத்த சாதனையை நிகழ்த்தியதில்லை.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்