IPL 2026: ஐபிஎல் 2026 சீசன் இந்த 4 வீரர்களுக்கு கடைசியா? கடந்த சீசனில் செயல்திறன் எப்படி?

Indian Premier League: எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வரும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகின்றனர். அந்தவகையில், ஐபிஎல் 2026 சீசனுடன் ஓய்வு பெறக்கூடிய அதிக வாய்ப்புள்ள 4 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

IPL 2026: ஐபிஎல் 2026 சீசன் இந்த 4 வீரர்களுக்கு கடைசியா? கடந்த சீசனில் செயல்திறன் எப்படி?

எம்.எஸ்.தோனி - இஷாந்த் சர்மா - ரஹானே

Published: 

15 Mar 2026 14:57 PM

 IST

19வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நேரமே உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதன்படி விராட் கோலி , ரோஹித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி (MS Dhoni) போன்ற ஜாம்பவான்களை களத்தில் மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வரும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகின்றனர். அந்தவகையில், ஐபிஎல் 2026 சீசனுடன் ஓய்வு பெறக்கூடிய அதிக வாய்ப்புள்ள 4 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: எம்.எஸ்.தோனியின் ஓய்வு உறுதி..? முன்னாள் சிஎஸ்கே வீரர் கொடுத்த தகவல்!

எம்.எஸ்.தோனி (CSK)

ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே அணியை 5 முறை சாம்பியனாக்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதன் தொடக்க சீசனில் இருந்து (2016 மற்றும் 2017 தவிர) எம்.எஸ்.தோனி விளையாடி வருகிறார். கடந்த 2024 மற்றும் 2025 ஆசிய சீசன்களில் தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தோனி விளையாடி வருகிறார். இதுமட்டுமின்றி, தோனி தற்போது ஐபிஎல் 2026க்கு பங்கேற்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எனவே, ஒரு வீரராக தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம்.

ஐபிஎல் 2026-க்காக, தோனியின் வாரிசாகக் கருதப்படும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியில் சேர்த்துள்ளது. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை சஞ்சு சாம்சன் தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார். எம்.எஸ். தோனி இதுவரை 278 போட்டிகளில் 24 அரைசதங்களுடன் 5,439 ரன்கள் எடுத்துள்ளார்.

அஜிங்க்யா ரஹானே (KKR)

ஐபிஎல் 2026 வரை அஜிங்க்யா ரஹானே கேப்டனாக நீடிப்பார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த சீசனில் ரஹானேவின் பேட்டிங் செயல்திறன் மோசமாக அமைந்தால், இதுவே இவரது கடைசி சீசனாக இருக்கலாம். 37 வயதான அஜிங்க்யா ரஹானே கேகேஆர் விடுவித்தால், வேறொரு அணி அவரை வாங்குவது சாத்தியமில்லை. அஜிங்க்யா ரஹானே இதுவரை 198 ஐபிஎல் போட்டிகளில் 33 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் உட்பட 5032 ரன்கள் எடுத்துள்ளார்.

இஷாந்த் சர்மா (GT)

37 வயதான வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 117 ஐபிஎல் போட்டிகளில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2025 சீசனில், இஷாந்த்  சர்மா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினாலும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அதாவது ஐபிஎல் 2025 சீசனில் 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இந்தநிலையில், வருகின்ற ஐபிஎல் 2026 சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்படவில்லை என்றால், இதுவே அவரது கடைசி சீசனாக இருக்கலாம்.

ALSO READ: வலுவிழந்ததா டெல்லி..? வெளியேறிய கெவின் பீட்டர்சன்.. என்ன காரணம்?

மார்கஸ் ஸ்டோய்னிஸ் (PBKS)

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். அவரை அந்த அணிரூ. 11 கோடிக்கு தக்கவைத்துள்ளது. ஸ்டோய்னிஸ் ஐபிஎல்லில் இதுவரை 4 அணிகளுக்காக 109 போட்டிகளில் விளையாடி 2,026 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் அவரது செயல்திறன் தோல்வியடைந்து பஞ்சாப் கிங்ஸ் அவரை விடுவித்தால், இந்த சீசன் (ஐபிஎல் 2026) ஒரு வீரராக அவரது கடைசி சீசனாக இருக்கலாம்.

Follow Us
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக செல்லலாம் - அனுமதி வழங்கிய ஈரான்
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்காவில் 400 ஆண்டுகள் சிறை தண்டனை
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - இன்ஃபோசிஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு