IPL 2025 Underperformers: மெகா ஏலத்தில் அதிக விலை.. ஐபிஎல் 2025ல் சொதப்பல்.. அனுபவ வீரர்களை கலாய்த்த ஐஸ்லாந்து கிரிக்கெட்!
Iceland Cricket X Post: ஐபிஎல் 2025 சீசனில் சொதப்பிய வீரர்களை கொண்டு ஐஸ்லாந்து கிரிக்கெட் ஒரு நகைச்சுவை அணியை உருவாக்கியுள்ளது. ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மெகா ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த "சொதப்பிய அணி" சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களின் மோசமான செயல்பாடுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்தும் கட்டுரை விவரிக்கிறது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்குள் எந்த 4 அணிகள் போட்டியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது முதலே நிலவி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் கனவை தகர்த்தனர். அதேநேரத்தில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதிபெற கடுமையாக உழைத்து வருகின்ற. ஐபிஎல் 2025 பல புதுமுக வீரர்கள் களமிறங்கி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல், அக்ஸர் படேல் உள்ளிட்ட சில வீரர்கள் அணிகளுக்கு புதிதாக தலைமை தாங்கி அசத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில அனுபவ வீரர்களின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது.
சொதப்பிய வீரர்களை கொண்டு புதிய டீம்:
On a rain day in Reyjavík, we give you our IPL 2025 frauds and scammers team:
R Tripathi
R Ravindra
I Kishan
R Pant (c & wk)
V Iyer
G Maxwell
L Livingstone
D Hooda
R Ashwin
M Pathirana
M ShamiNo impact player: M Kumar
— Iceland Cricket (@icelandcricket) May 5, 2025
ஐபிஎல் 2025 சீசனில் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களால் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையான பதிவுகளுக்கு பெயர் பெற்ற ஐஸ்லாந்து கிரிக்கெட், சொதப்பிய வீரர்களை கடுமையாக விமர்சித்து ஒரு அணியை உருவாக்கியுள்ளது. தற்போது அந்த அணி பற்றிய விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்லாந்து கிரிக்கெட் வெளியிட்ட பதிவில், “ ஐபிஎல் 2025 சீசனில் சொதப்பிய வீரர்களை கொண்ட அணியை உங்களுக்கு வழங்குகிறோம் என்று தெரிவித்திருந்தது. அந்த அணியின் விவரம் பின்வருமாறு..
ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், க்ளென் மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், மதிஷா பதிரானா, முகமது ஷமி
இம்பேக்ட் வீரர்: முகேஷ் குமார்
ரிஷப் பண்ட்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்டை ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுத்தது. பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, கேப்டனாக அவர் எடுக்கும் முடிவும் அணிக்கு தோல்வியை பெற்று தருகிறது. சராசரியாக 12 ரன்களுக்கு மேல் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. மேலும், போட்டியின்போது சக வீரர்களிடம் அதிகபடியான கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை விடுவிக்கக்கூடும்.