Shashank Singh: ஷ்ரேயாஸ் என்னை அடித்திருக்க வேண்டும்.. புலம்பிய ஷஷாங்க் சிங்..!

Shreyas Iyer Scolds Shashank Singh: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டித் தகுதிச் சுற்றில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங்கை கடுமையாகத் திட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. முக்கியமான தருணத்தில் ஷஷாங்க் சிங்கின் கவனக்குறைவு காரணமாக இது நடந்தது. இருப்பினும், பின்னர் இருவரும் இரவு உணவு சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shashank Singh: ஷ்ரேயாஸ் என்னை அடித்திருக்க வேண்டும்.. புலம்பிய ஷஷாங்க் சிங்..!

ஷஷாங்க் சிங் - ஷ்ரேயாஸ் ஐயர்

Published: 

09 Jun 2025 08:00 AM

 IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2025) கொண்டாட்டங்கள் முடிந்திருந்தாலும், அதை பற்றிய பேச்சுகள் இன்னும் முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு போட்டி பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்தியன் பிரீமியர் லீக் 2025ன் குவாலிஃபையர் 2 இல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 200 ரன்களை கடந்து சேஸிங் செய்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும், அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். இதன்போது, பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சக வீரராக ஷஷாங்க் சிங்குடன் கைகுலுக்கும்போது அவரை திட்டுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பேசிய ஷஷாங்க் சிங் ஒரு முக்கியமான போட்டியில் தனது கவனக்குறைவான அணுகுமுறையால் தான் திட்டப்பட்டதாகவும், இதன் காரணமாக பஞ்சாப் அணி போட்டியில் தோற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயர் தன்னை திட்டிய போதிலும், பின்னர் இருவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டோம் என்று தெரிவித்தார்.

ஷஷாங்க் சிங் விளக்கம்:

இதுகுறித்து பேசிய ஷஷாங்க் சிங், “ நான் திட்டு வாங்குவதற்கு தகுதியானவன்தான். ஷ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும். என் தந்தையும் இதனால் என்னிடம் பேசவில்லை. நான் கவனக்குறைவாக இருந்தேன். அது மிகவும் முக்கியமான நேரம். இதை என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெளிவாக என்னிடம் கூறினார். ஆனால், அதன்பின்னர், என்னை இரவு உணவிற்கு அழைத்து சென்றார்.

ஷஷாங்க் சிங்கை ஷ்ரேயாஸ் ஐயர் திட்டிய காட்சி:

தற்போது உலக கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயரை விட சிறந்த கேப்டன் யாரும் இல்லை. டிரஸ்ஸிங் ரூமில் உள்ள அனைத்து இளம் வீரர்களை அரவணைத்து கொண்டார். சரியான நபர்களிடமிருந்து சரியான ஆலோசனைகளை பெறுவதில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரும்போதும் தயங்குவதில்லை. போட்டியின்போது நமக்கு தேவையான சுதந்திரத்தை தருவார். ஆடத்தின்போது யாருக்காவது ஏதேனும் ஆலோசனை இருந்தால், அவர்கள் தன்னிடம் பேசலாம் என்று எங்களிடம் சொன்ன ஒரே கேப்டன் அவர்தான்” என்றார்.