India’s WTC 2025-27 Schedule: 5 வலுவான அணிகளுடன் டெஸ்ட் தொடரில் மோதும் இந்திய அணி.. எப்போது, யார் யாருடன்..?

World Test Championship 2025-27: இந்திய அணி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது. இந்த தொடர்களின் தேதிகள் மற்றும் எதிரணி விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Indias WTC 2025-27 Schedule: 5 வலுவான அணிகளுடன் டெஸ்ட் தொடரில் மோதும் இந்திய அணி.. எப்போது, யார் யாருடன்..?

இந்திய அணி

Published: 

09 Aug 2025 18:51 PM

இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் (India – England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாடியது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 2-2 என டிரா ஆனது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 (World Test Championship 2025-27) அட்டவணையில் இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 2ல் வெற்றி, 2ல் தோல்வி மற்றும் ஒன்றை டிரா செய்துள்ளது. அதன்படி, புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி (Indian Cricket Team) 3வது இடத்தில் உள்ளது. இப்போது, இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த 5 அணிகளுடன் டெஸ்ட் தொடரை விளையாட வேண்டும். இவை அனைத்தையும் வென்றால் மட்டுமே, இந்திய அணி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அந்தவகையில், இந்திய அணி அடுத்ததாக விளையாடப்போகும் 5 டெஸ்ட் அணிகளுக்கான விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்:

இந்திய அணி தற்போது வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் ஆசிய கோப்பை 2025 இல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் இறுதிப் போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய போட்டி முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி 2025 அக்டோபரில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், இரண்டாவது போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 10ம் தேதி முதல் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலும் நடைபெறும்.

ALSO READ: கால் வைக்கும்போதெல்லாம் இந்திய அணி வெற்றி.. யார் இந்த லக்கி சார்ம்..?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர், இலங்கை சுற்றுப்பயணம்:


இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வருகின்ற 2025 நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் விளையாடுவார்கள். இதன் முதல் டெஸ்ட் போட்டியானது வருகின்ற 2025 நவம்பர் 14 முதலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 22 முதலும் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிய பிறகு, இந்திய அணி, நீண்ட இடைவெளிக்கு பிறகு அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆகஸ்ட் மாதம் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும். இந்த சுற்றுப்பயணத்தில், இந்த இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும். இந்த நீண்ட இடைவெளிக்குள் இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடும்.

ALSO READ: இந்திய அணி இதற்காக இங்கிலாந்து வரவில்லை.. ஸ்டாக்ஸ் செயலை விமர்சித்த சச்சின்!

2026 நவம்பரில் நியூசிலாந்து சுற்றுப்பயணம்:

இதை தொடர்ந்து, இந்திய அணி 2026 நவம்பரில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும். 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுக்கான கடைசி டெஸ்ட் தொடரை இந்திய அணி 2027ல் ஜனவரி 2027 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும். இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்தியாவில் விளையாடும்.