India’s No. 3 Test Batsman Crisis: புஜாராவுக்கு பிறகு யார்? இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தில் தடுமாற்றம்..!

India Test Team's No.3 Spot: இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தில் ராகுல் டிராவிட், சேதேஷ்வர் புஜாரா போன்ற வீரர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். புஜாரா நீக்கப்பட்ட பின்னர் இந்த இடத்தில் நம்பிக்கைக்குரிய வீரர் இல்லை. கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாட முடியவில்லை.

Indias No. 3 Test Batsman Crisis: புஜாராவுக்கு பிறகு யார்? இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தில் தடுமாற்றம்..!

கருண் நாயர் - சாய் சுதர்சன்

Published: 

17 Jul 2025 08:05 AM

இந்திய டெஸ்ட் அணியில் எப்போதும் 3 இடம் மற்றும் 4வது மிக முக்கிய இடமாக பார்க்கப்பட்டது. ஒரு காலத்தில் 3வது இடத்தில் ராகுல் டிராவிட்டும், 4வது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும் களமிறங்குவார்கள். இவர்களது ஓய்வுக்கு பிறகு, 3வது இடத்தில் சேதேஷ்வர் புஜாராவும், 4வது இடத்தில் விராட் கோலியும் (Virat Kohli) களமிறங்கினர். இதனால், இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) வலுவானதாக இருந்தது. தற்போது, 4வது இடத்தில் சுப்மன் கில் (Shubman Gill) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், புஜாரா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து 3வது இடத்தில் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக யாரும் இல்லை என்பதே உண்மை. ராகுல் டிராவிட் மற்றும் புஜாரா நின்று விளையாடியபோது, இந்திய அணியின் சுவராக இருந்தனர். ஆனால், சமீப காலமாக இந்த சுவர் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

3வது இடத்தில் யாருக்கு வாய்ப்பு..?


இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி விளையாடிய முதல் டெஸ்டில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். ஆனால், இவர் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனை தொடர்ந்து, கருண் நாயர் 2வது டெஸ்டில் (31,26) மற்றும் 3வது டெஸ்டில் (40,14) என்று மூன்றாவது இடத்தில் விளையாடினார். இவரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

2025 ஜூலை 23ம் தேதி மான்செண்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் போட்டியில் கருண் நாயர் விளையாடுவாரா அல்லது சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பார்ப்போம். அதேநேரத்தில், உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருண் நாயர் செயல்திறன் எப்படி..?

33 வயதான கருண் நாயர் நடப்பு தொடரில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 4வது இடத்தில் களமிறங்கிய கருண் நாயர், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் 3வது இடத்தில் பேட்டிங் செய்தார். இருப்பினும், இவரால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தொடருக்கு முன்பே கருண் நாயர் அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெளிவாக கூறியிருந்தார். ஆனால், கம்பீரின் எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், இந்திய அணிக்காக இன்னும் அவருக்கு அறிமுகம் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணிக்காக இதுவரை 103 முதல் தர போட்டிகளில் 27 சதங்கள், 31 அரைசதங்கள் 7,841 ரன்கள் எடுத்துள்ளார். அபிமன்யு ஈஸ்வரன் 89 முதல் தர போட்டிகளில் 3,857 ரன்களும், 34 டி20 போட்டிகளில் 976 ரன்களும் எடுத்துள்ளார்.

 

Related Stories
India vs England 4th Test: சச்சினின் சதமே கடைசி.. ஓல்ட் டிராஃபோர்டில் 35 ஆண்டுகளாக சத வறட்சி.. முடிவு கட்டுவார்களா இந்திய பேட்ஸ்மேன்கள்..?
Azharuddin Bungalow Robbery: ஆள் இல்லாத நேரத்தில் திருட்டு.. முன்னாள் கிரிக்கெட்டர் அசாருதீன் வீட்டில் கைவரிசை..!
West Indies Legends Jersey: 3 லட்சம் ரூபாய் தங்க ஜெர்சி..! அதிக மதிப்புள்ள ஆடையுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்!
Jasprit Bumrah: டெஸ்டில் பும்ரா கால் வைத்தால் தோல்வியா..? வெளியான புள்ளிவிவரங்கள்!
India vs England 4th Test: ஓல்ட் டிராஃபோர்ட் சாபத்தை இந்தியா உடைக்குமா? சுப்மன் கில் படைக்கு காத்திருக்கும் சவால்!
Royal Challengers Bengaluru: ஆதாரங்களை சமர்பித்த கர்நாடகா அரசு.. ஆர்சிபி அணியை சாடிய உயர்நீதிமன்றம்!