Suryakumar Yadav: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லையா..? செய்தியாளர்கள் அடுக்கிய கேள்வி! கூலாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ்!

India's Asia Cup 2025 Strategy: 2025 ஆசிய கோப்பைக்கான அறிமுக விழா துபாயில் நடைபெற்றது. இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர் சந்திப்பில் அணியின் தயார்நிலை, சஞ்சு சாம்சனின் இடம், பாகிஸ்தான் போட்டி குறித்துப் பேசினார். அணியின் தயாரிப்புகள் நல்லதாக இருப்பதாகவும், சாம்சனின் இடத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

Suryakumar Yadav: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லையா..? செய்தியாளர்கள் அடுக்கிய கேள்வி! கூலாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ்!

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்

Published: 

09 Sep 2025 18:33 PM

 IST

2025 ஆசிய கோப்பை (2025 Aaia Cup) போட்டியில் கோப்பையை அறிமுகப்படுத்தும் விழாவானது இன்று அதாவது 2025 செப்டம்பர் 9ம் தேதி துபாயில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். ஆசியக் கோப்பை தொடக்க போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன், அனைத்து கேப்டன்களும் ஊடகங்களுடன் உரையாடி, தங்கள் அணிகளின் தயாரிப்புகள் குறித்து தகவல்களை வெளியிட்டனர்.

ஜாலியாக பதிலளித்த சஞ்சு சாம்சன்:


இந்திய அணி நிர்வாகம் வகுத்துள்ள திட்டங்கள், சஞ்சு சாம்சன் இருப்பு குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆசிய கோப்பை அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர், ஆடும் பதினொன்றில் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனின் இடம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது நகைச்சுவையாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “நான் உங்களுக்கு விளையாடும் XI-ஐ அனுப்புவேன். நாங்கள் உண்மையில் அவரை மிகவும் நன்றாக கவனித்துக்கொள்கிறோம். கவலைப்படாதே, நாளை சரியான முடிவை எடுப்போம்” என்றார்.

ALSO READ: வைரலான ஹர்திக் பாண்ட்யாவின் வாட்ச் இவ்வளவு விலையா? இதன் சிறப்பம்சங்கள் என்ன?

இந்திய அணி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “ஒரு அணியாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நாங்கள் ஒன்றாக ஒரு தொடரை விளையாடினோம். ஆனால், ஐபிஎல்லில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே, இந்த டி20 வடிவம் சிறப்பாக போய் கொண்டிருக்கிறது. கடந்த 2025 ஜூன் மாதத்திற்குப் பிறகு நாங்கள் ஒன்றாக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் அதுதான் இந்தப் போட்டியின் சவால். இந்தச் சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், நாளை முதல் விஷயங்கள் எப்படிச் செல்கின்றன என்பதைப் பார்ப்போம்” என்றார்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி:

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது ஆக்ரோஷத்தை குறைத்து விளையாடுவீர்களா என்று சூர்யகுமார் யாதவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆக்கிரமிப்பு எப்போதும் இருக்கும். நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், ஆக்ரோஷம் இல்லாமல் முடியாது” என்றார்.

ALSO READ: ஆசியக் கோப்பை தொடக்கப் போட்டி! ஆப்கானிஸ்தான் – ஹாங்காங் மோதல்.. கடந்தகால சந்திப்புகள் எப்படி?

அதே கேள்விக்கு, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, “யாராவது ஆக்ரோஷமாக இருக்க விரும்பினால், அது அவர்களுடைய முடிவு. எனது அணியைப் பொறுத்தவரை, நாங்கள் யாருக்கும் எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கபோவதில்லை” என்றார்.