Hardik Pandya Viral Watch: வைரலான ஹர்திக் பாண்ட்யாவின் வாட்ச் இவ்வளவு விலையா? இதன் சிறப்பம்சங்கள் என்ன?
Hardik Pandya Richard Mille RM 27-04: ஹர்திக் பாண்டியா 2025 ஆசிய கோப்பைக்கான பயிற்சியின் போது அணிந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிச்சர்ட் மில்லே RM 27-04 கடிகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இக்கடிகாரம் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) 2025 ஆசிய கோப்பைக்கு (2025 Asia Cup) தயாராகி வருகிறார். இந்த போட்டிக்காக பயிற்சியின்போது, அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்போது, ஹர்திக் பாண்ட்யா ரிச்சர்ட் மில்லே ஆர்.எம். 27-04 என்ற சொகுசு கடிகாரத்தை அணிந்திருந்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யாவின் வாட்ச்ன் சிறப்பு என்ன என்பதை அறிய ரசிகர்கள் கூகுளில் தேட தொடங்கியுள்ளனர். முன்னதாக, ஹர்திக் பாண்டயா தனது தோற்றம் மற்றும் ஹேர்ஸ்டைலுக்காக வைரலானார். அந்த நேரத்தில், ஹர்திக் பாண்ட்யாவை பார்க்க துபாயில் உள்ள ஐசிசி (ICC) அகாடமியிலும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
ALSO READ: சூர்யகுமார் யாதவ் கேப்டன்..! கில்லுக்கு வாய்ப்பு.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!




ஸ்பெஷல் வாட்ச்:
View this post on Instagram
ஹர்திக் பாண்ட்யாவின் கைக்கடிகாரம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹர்திக் எப்போதும் தனது பேஷன் மற்றும் ஸ்டைல் ஆபரணங்களுக்காக அறியப்படுபவர். இப்போது தான் கட்டியிருந்த வாட்ச் குறித்தும் தனது ரசிகர்களை பேச வைத்தார். உலகளவில் இதுபோன்ற கைக்கடிகாரங்கள் 50 மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யாவின் புதிய கடிகாரமான ரிச்சர்ட் மில்லே ஆர்.எம். 27-04, டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு டைட்டாகார்ப் உறை, வெறும் 30 கிராம் எடையே என்றாலும், இது 12,000 கிராம் வரை அதிர்ச்சியை தாங்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ. 20 கோடி, இது ஆசிய கோப்பை பரிசுத் தொகையான ரூ. 2.6 கோடியை விட மிக அதிகம். அதாவது, இந்த கடிகாரம் போட்டியின் மொத்த தொகையை விட கிட்டத்தட்ட 8 மடங்கு விலை அதிகம்.
ALSO READ: ஆசியக் கோப்பைக்காக மாஸ் லுக்.. புது ஹேர் ஸ்டைலில் உலா வரும் ஹர்திக் பாண்ட்யா!
இந்த கடிகாரத்தில் என்ன சிறப்பு..?
ஹர்திக் பாண்ட்யா இதுபோன்ற உயர் ரக கடிகாரங்களை அணிவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் அவர் பிரபலமான ரிச்சர்ட் மில்லே RM 27-02 ஐ அணிந்திருந்தார். இது சுமார் ரூ. 7 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிகாரம் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், பட்டை உட்பட அதன் மொத்த எடை 30 கிராம் மட்டுமே, கிட்டத்தட்ட ஆறு A4 தாள்களைப் போல இலகுவானது. இது ரிச்சர்ட் மில்லின் சாதனையாகும். இருப்பினும், இதன் வலிமையை மதிப்பிட முடியும். ரிச்சர்ட் மில்லி RM 27-04 ஒரு எஃகு கேபிளில் இருந்து நெய்யப்பட்ட ஒரு வலையைக் கொண்டுள்ளது. 0.27 மிமீ தடிமன் மட்டுமே கொண்ட இந்த கேபிள், கிரேடு 5 டைட்டானியம் பெசல் வழியாக 38 முறை முறுக்கப்பட்டு பின்புறத்தில் ஒரு நிலையான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நெய்த வலையமைப்பின் மொத்த மேற்பரப்பு 855 சதுர மில்லிமீட்டர்கள் ஆகும்.