Hardik Pandya: மீண்டும் காதலில் ஹர்திக் பாண்ட்யா..? க்லு கொடுத்த பிரபல அசாம் நடிகை..!
Mahieka Sharma - Hardik Pandya Spark Dating Rumours: மஹிசா சர்மா சமீபத்தில் கண்ணாடி முன்னாடி செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னாடி இருந்த புகைப்படம் ஒன்றில் ஒரு ஆணின் புகைப்படம் மங்கலாக இருந்தது. இது ஹர்திக் பாண்ட்யா போல் காட்சியளித்தது.

ஹர்திக் பாண்ட்யா
இந்திய அணியின் (Indian Cricket Team) கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தமுறை தனது ஹேர் ஸ்டைலுக்காகவோ, களத்தில் தனது செயல்திறனுக்காவோ அல்ல, மாறாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஊகங்களால் தலைப்பு செய்தியில் இடம் பிடித்துள்ளது. 2024ம் ஆண்டு முடிவில் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சிடம் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பிரிவதாக அறிவித்தார். இது அவரது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்தநிலையில், ஹர்திக் பாண்ட்யா தற்போது மாடலும், நடிகையுமான மஹிசா சர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல், இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வது போல் தெரிகிறது. இது ஊகங்களுக்கு மேலும் வலு சேர்ப்பது போல் தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: பாகிஸ்தான் வீரர்களை கண்டுகொள்ளாத இந்திய அணி.. புகாரளித்த பாகிஸ்தான்!
யாரை காதலிக்கிறார் ஹர்திக் பாண்ட்யா..?
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்ள, அவரது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். முன்னதாக, பாலிவுட் நடிகையும் மாடலுமான நடாஷாவை முன்பு திருமணம் செய்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா, தனிப்பட்ட காரணத்திற்காக பிரிவதாக அறிவித்தார். இவர்கள் இருவருக்கும் அகஸ்தியா என்ற மகன் உள்ளார். அதன் பிறகு, அவர் ஜாஸ்மின் வாலியாவை டேட்டிங் செய்வதாக செய்திகள் வந்தன. ஆனால், இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்தநிலையில்தான், ஹர்திக் பாண்ட்யா அசாமிய நடிகையும் மாடலுமான மஹிகா சர்மாவை டேட்டிங் செய்வதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், ஹார்டிக் பாண்ட்யா அல்லது மஹிகா சர்மா இந்த செய்திகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த செய்திகள் வெறும் வதந்திகளாகவே உள்ளன.
மஹிசா சர்மா சமீபத்தில் கண்ணாடி முன்னாடி செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னாடி இருந்த புகைப்படம் ஒன்றில் ஒரு ஆணின் புகைப்படம் மங்கலாக இருந்தது. இது ஹர்திக் பாண்ட்யா போல் காட்சியளித்தது. தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யாவின் ஜெர்சி எண்ணான 33 ஐ தனது கையின் கட்டை விரலிலும், இருவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்திருந்தது போலவும் அடுத்தடுத்து புகைப்படம் வெளியானது. இருப்பினும், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ALSO READ: சூர்யாவின் சூரசம்ஹாரம்.. பாகிஸ்தானுக்கு எதிராக பக்கா பிளான்.. கெத்தாக வென்ற இந்தியா!
யார் இந்த மஹிசா சர்மா..?
பொருளாதாரம் மற்றும் நிதிதுறையில் பட்டம் பெற்ற மஹிசா சர்மா, தற்போது
ஒரு அசாமிய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்று மிஸ் டீன் நார்த்ஈஸ்ட் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 2024ம் ஆண்டில் இந்திய பேஷன் விருதுகளில் ஆண்டின் சிறந்த மாடல் விருதை வென்றார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக சமூக சேவையை மஹிசா சர்மா மேற்கொண்டு வருகிறார்.