Yashasvi Jaiswal: பார்வையற்ற சிறுவனுக்கு பேட் பரிசு.. கட்டிப்பிடித்த ஆரத்தழுவிய ஜெய்ஸ்வால்..!

IND vs ENG Test: இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 வயது பார்வையற்ற ரசிகர் ரவியை சந்தித்தார். ரவியின் கிரிக்கெட் ஆர்வத்தை கண்டு மனம் நெகிழ்ந்த ஜெய்ஸ்வால், அவருக்கு பேட் பரிசளித்தார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. இந்தியா வெற்றிக்கு அருகில் உள்ளது.

Yashasvi Jaiswal: பார்வையற்ற சிறுவனுக்கு பேட் பரிசு.. கட்டிப்பிடித்த ஆரத்தழுவிய ஜெய்ஸ்வால்..!

பார்வையற்ற ரசிகருக்கு பரிசு தந்த ஜெய்ஸ்வால்

Published: 

06 Jul 2025 18:20 PM

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான 2வது டெஸ்ட் (IND vs ENG 2nd Test) போட்டி தற்போது வரை இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. 2025 ஜூலை 6ம் தேதியான நேற்றைய நாள் முடிவில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது மிக முக்கிய ரசிகர் ஒருவரை சந்தித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனுடன் உரையாடிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அப்போது, அந்த சிறுவனின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும், புரிதலையும் கண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆச்சரியப்பட்டார். அதன்பிறகு, அந்த சிறுவன் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை சந்தித்தார்.

பார்வையற்ற குழந்தைக்கு பரிசு:

எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின்போது, பிசிசிஐ, சமூக வலைதளங்களில் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி என்ற 12 வயது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்தார். அப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த சிறிய ரசிகரை கட்டுப்பிடித்து, “ ஹாய் ரவி, நான் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் கிரிக்கெட்டின் பெரிய ரசிகர் என்பதை அறிந்ததிலிருந்து உங்களை சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், உங்களை சந்தித்த பிறகு எனக்கு பதட்டமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

பிசிசிஐ வெளியிட்ட வீடியோ:

தொடர்ந்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 வயது பார்வையற்ற சிறுவன் ரவிக்கு ஒரு சிறப்பு பரிசாக பேட் ஒன்றை வழங்கினார். அப்போது அவர், “இந்த பேட்டை உன்னுடன் வைத்திரு, இந்த தருணம் எனக்கும் மிகவும் மறக்க முடியாத ஒன்று” என்று தெரிவித்தார்.

5 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி:

608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தற்போது செய்தி எழுதும் வரை 100 ரன்களை கடந்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணி இழந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை ஆகாஷ் தீப் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

மீதமுள்ள 5 விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தினால் இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்யும். அப்படி இல்லையென்றால், போட்டியானது டிராவில் முடிவடையும். அப்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.