Virat Kohli: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்! அழைக்கும் பிசிசிஐ.. மௌனம் காக்கும் விராட் கோலி?

India A vs Australia A ODI: விராட் கோலி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த அணியில் இடம் பெறவில்லை.

Virat Kohli: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்! அழைக்கும் பிசிசிஐ.. மௌனம் காக்கும் விராட் கோலி?

விராட் கோலி

Published: 

24 Sep 2025 08:09 AM

 IST

இந்திய கிரிக்கெட் அணியில் (Indian Cricket Team) சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங் போன்ற சில புகழ்பெற்ற வீரர்களுக்கு பிறகு, தற்போது கிரிக்கெட்டை ஆண்டு வரும் விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) காலமும் முடிவடையப்போகிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டி ஓய்வுக்கு பிறகு, இருவரும் இப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதற்கிடையில், இந்த இரண்டு வீரர்களும் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் களத்தில் இருந்து விலகி உள்ளனர். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, இந்திய அணி ஒரு ஒருநாள் தொடரில் கூட விளையாடவில்லை. இப்போது இந்திய அணி வருகின்ற 2024 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்ற பேச்சு உள்ளது.

இதற்கிடையில், இருவரையும் இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜிக் அகர்கர் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட வேண்டும் என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், ரோஹித் சர்மா தயாராக இருக்கிறார். ஆனால் விராட் கோலியின் முடிவு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ALSO READ: எந்த அணி பைனலில்..? சிக்கி தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான்.. சுவாரஸ்யமாகும் சூப்பர் 4!

விராட் கோலி விளையாடுவாரா..? இல்லையா..?


விராட் கோலி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த அணியில் இடம் பெறவில்லை. இந்த தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்ற ஊகம் இப்போது எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடர் வருகின்ற 2025 செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கும். இரண்டாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 3ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 5ம் தேதியும் நடைபெறும். இதன் பிறகு, அதிகாரப்பூர்வ மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும்.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய அணி எப்போது அறிவிக்க வாய்ப்பு?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைக் கருத்தில் கொண்டு, தேர்வுக் குழு இருவரையும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடுமாறு கேட்டுக்கொள்கிறது. ஆனால் விராட் கோலி தனது குடும்பத்தினருடன் லண்டனில் இருக்கிறார். விராட் கோலி தனது குடும்பத்தினருடன் அங்கு சுற்றித் திரிவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா பெங்களூரில் உள்ள சிறப்பு மையத்தில் உடற்பயிற்சி செய்து வரும் நிலையில், அவரது பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக, ரோஹித் சர்மா இந்தியா ஏ அணிக்காக விளையாடுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.