India vs Australia: கோலி மற்றும் ரோஹித் மீண்டும் வருவார்களா? ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!

Virat Kohli Rohit Sharma Return: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வாரா என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. விராட் கோலியும் அணியில் இடம்பெறலாம். காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள்.

India vs Australia: கோலி மற்றும் ரோஹித் மீண்டும் வருவார்களா? ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!

விராட் கோலி - ரோஹித் சர்மா

Published: 

03 Oct 2025 21:05 PM

 IST

விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆகியோர்  எப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்ற கேள்வியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இந்த 2 ஜாம்பவான்களும் மீண்டும் களமிறங்க உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணிகளை பிசிசிஐ (BCCI), நாளை அதாவது 2025 அக்டோபர் 4ம் தேதி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சர்வதேச அளவில் ஒரு போட்டியில் கூட விளையாடாததால், ஒருநாள் தொடருக்கான அவர்களின் தேர்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும், அணியின் தேதி ஒத்திவைக்கப்படலாம்.

மீண்டும் களமிறங்குவார்களா..?

2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றனர். இந்த 2 ஜாம்பவான்களும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தனர். இவர்களின் ஓய்வுக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதற்கிடையில், சுப்மன் கில் புதிய டெஸ்ட் கேப்டனாகியுள்ளார்.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வருகின்ற 2025 அக்டோபர் 19 முதல் 2025 நவம்பர் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.

கேப்டனாக தொடர்வாரா ரோஹித் சர்மா..?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வாரா என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. விராட் கோலியும் அணியில் இடம்பெறலாம்.  காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள். எனவே, விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும், ஆல்ரவுண்டராக சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று கடந்த பல வாரங்களாக ஊகங்கள் நிலவி வருகின்றன. இவை இப்போதைக்கு வெறும் வதந்திகள் மட்டுமே, ஆனால் சில தேர்வாளர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 உலகக் கோப்பை வரை அணியில் இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.