Smriti Mandhana Fastest Century: 50 பந்துகளில் அதிவேக சதம்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மாஸ் காட்டிய ஸ்மிருதி மந்தனா!
India Women vs Australia Women 3rd ODI: ஒருநாள் வரலாற்றில் ஒரு இந்தியரால் வேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெறும் 50 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையையும் ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) வரலாறு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், ஒருநாள் வரலாற்றில் ஒரு இந்தியரால் வேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெறும் 50 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலியின் (Virat Kohli) சாதனையையும் ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி வெறும் 52 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
தற்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அவரது சாதனையை முறியடித்துள்ளார். இது தவிர, பெண்கள் ஒருநாள் போட்டியில் வேகமாக சதம் அடித்த உலகின் இரண்டாவது பெண் வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.
ALSO READ: ஓமனுக்கு எதிரான போட்டியில் தலையில் காயம்.. சூப்பர் 4ல் அக்சர் படேல் களமிறங்குவாரா?
ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டம்:
Fastest ODI hundreds for India 🤩
1. Smriti Mandhana – 50 balls vs AUS, 2025
2. Virat Kohli – 52 balls vs AUS, 2013#CricketTwitter #INDWvsAUSW pic.twitter.com/7pqu8wqmLP— Cricbuzz (@cricbuzz) September 20, 2025
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா வெறும் 50 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் தனது சதத்தை எட்டினார். இருப்பினும், இதன் பிறகு, அதிரடியான ஆட்டத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா அதிக நேரம் நீட்டிக்க முடியவில்லை. அதன்படி, 63 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில், ஸ்மிருதி மந்தனா 91 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் எடுத்தார்.
அதிவேக சதம் அடித்த வீராங்கனை யார்..?
மகளிர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக சதம் அடித்த சாதனை ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் வசம் உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 45 பந்துகளில் சதம் அடித்தார். ஸ்மிருதி மந்தனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி உள்ளார், அவர் அதே போட்டியில் 57 பந்துகளில் தனது சதத்தை எட்டினார்.
ALSO READ: மீண்டும் மீண்டுமா..? செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்த பாகிஸ்தான்.. அதிருப்தியில் ஐசிசி!
ஒரு வருடத்தில் நான்கு சதங்கள்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்ததன் மூலம், 2025ம் ஆண்டில் மட்டும் தனது 4வது ஒருநாள் சதத்தையும் எட்டினார். முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டில் 4 சதங்களை அடித்தார். ஒரே ஆண்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக ஸ்மிருதி மந்தனா வைத்திருக்கிறார். மேலும், தென்னாப்பிரிக்காவின் தாஜ்மின் பிரிட்ஸ் இந்த 2025ம் ஆண்டில் நான்கு ஒருநாள் சதங்களையும் அடித்தார்.