Pratika Rawal Injury: காயத்தால் விலகிய பிரதிகா ராவல்.. ஸ்மிருதியுடன் தொடக்கம் தரப்போவது யார்..?

India W vs Australia W: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிரதிகா ராவலுக்குப் பதிலாக யார் களமிறங்குவார்கள் என்பதுதான் இப்போதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பிரதிகா ராவல் இல்லாதபோது வங்கதேசத்திற்கு எதிராக தொடக்க வீரராக விளையாடிய அமன்ஜோத் கவுர், ஸ்மிருதியுடன் இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்புள்ளது.

Pratika Rawal Injury: காயத்தால் விலகிய பிரதிகா ராவல்.. ஸ்மிருதியுடன் தொடக்கம் தரப்போவது யார்..?

பிரதிகா ராவல்

Published: 

28 Oct 2025 08:29 AM

 IST

வருகின்ற அக்டோபர் 30ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி (IND W vs AUS W) அதிர்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் காயம் காரணமாக உலகக் கோப்பை அரையிறுதியில் இருந்து விலகியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும் போது பிரதிகா ராவலுக்கு (Prathika Raval) பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பிரதிகா பேட்டிங் கூட செய்யவில்லை.  உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி போன்ற முக்கியமான போட்டிகளுக்கு அவர் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்தது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, காயமடைந்த பிரதிகா ராவல் முழு போட்டியிலிருந்தும் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மில் இருந்த பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.

ALSO READ: ஆஸ்திரேலியாவுக்கு பயம் காட்டும் ஸ்மிருதி மந்தனா.. ரெக்கார்டு வேற லெவல்!

சிறப்பாக செயல்பட்ட பிரதிகா ராவல்:


2025 மகளிர் உலகக் கோப்பையில் பிரதிகா ராவலின் செயல்திறன் அற்புதமாக இருந்தது. 2025 உலகக் கோப்பையில் பிரதிகா ராவல் இதுவரை 6 லீக் போட்டிகளில் விளையாடி 51.33 சராசரியில் 308 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராங்கனை ஆனார். பிரதிகா, மந்தனாவுடன் இணைந்து, பல போட்டிகளில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பிரதிகா ராவல் ஒரு சதம் அடித்தது மட்டுமல்லாமல், ஸ்மிருதியுடன் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தார். இந்த சிறப்புமிக்க கூட்டணி காரணமாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிரதிகா ராவலுக்குப் பதிலாக யார் களமிறங்குவார்கள் என்பதுதான் இப்போதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பிரதிகா ராவல் இல்லாதபோது வங்கதேசத்திற்கு எதிராக தொடக்க வீரராக விளையாடிய அமன்ஜோத் கவுர், ஸ்மிருதியுடன் இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக தொடக்க வீரராக அமன்ஜோத் கவுர் எவ்வளவு பொருத்தமானவர் என்பது மற்றொரு கேள்வியாக எழுந்தது.

ALSO READ: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி எப்போது..? A டூ Z விவரங்கள் இதோ..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் பிரதிகா ராவலும் ஸ்மிருதி மந்தனாவும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இப்போது அரையிறுதிப் போட்டியில் அமன்ஜோத் கவுர் இதேபோன்ற கூட்டணியை உருவாக்குவாரா அல்லது ஹர்லீன் தியோலும் தொடக்க வீராங்கனையாக விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.