இந்தியா – பங்களாதேஷ் போட்டியில் குறுக்கிட்ட மழை – கைவிடப்பட்ட போட்டி
IND vs BAN : மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லீக் போட்டியில், இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொண்டது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நவி மும்பையின் டாக்டர் டி.ஒய்.படேல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 2025 பெண்கள் உலகக் கோப்பை (Women’s world cup) கிரிக்கெட் லீக் போட்டியில், இந்தியா மற்றும் வங்க தேச பெண்கள் அணிகள் மோதும் போட்டி மீண்டும் மழையால் தடைபட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்த காரணத்தால், போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து 43 ஓவர்களுக்கு மட்டுமே இரு அணிகளும் விளையாடின. இருப்பினும், ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மீண்டும் கனமழை (Heavy Rain) குறுக்கிட்டதால் 12.2 ஓவர்களுக்கு பிறகு ஆட்டம் நிறுத்தப்பட்டது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பங்களாதேஷின் இன்னிங்ஸ் நிலை
வங்க தேசம் பேட்டிங் செய்த நிலையில் பங்களாதேஷ் அணி இதுவரை 2 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை எடுத்திருந்தது. 12.2 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் தாகூர், ஆரம்பத்தில் சுமையா அக்தரை அவுட் செய்தார். தீப்தி சர்மா தன் பங்கிற்கு ரூபியா ஹைடர் ஜெலிக் விக்கெட்டை எடுத்து வங்க தேச அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து அந்த அணி 27 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்தது.




இதையும் படிக்க : ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.. ஏமாற்றத்துடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி!
போட்டி கைவிடப்பட்டது குறித்து ஐசிசி பதிவு
The final #CWC25 league stage fixture in Navi Mumbai has been called off owing to rain#INDvBAN | 📝: https://t.co/l1QhcmT9XY pic.twitter.com/SKtFkMfBkS
— ICC (@ICC) October 26, 2025
இந்த நிலையில் 26 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பாக ஸ்மிருதி மந்தனா மற்றும் அமர்ஜோத் கவுர் நல்ல துவக்கம் தந்தனர். இந்த நிலையில் 8.4 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையும் படிக்க : நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல்.. உலகக் கோப்பையில் அரையிறுதியை உறுதி செய்த இந்திய மகளிர் அணி!
இதனையடுத்து இந்திய அணி லீக் சுற்றை 7 புள்ளிகளுடன் முடித்துள்ளது. அதே நேரம் பங்களாதேஷ் அணி 3 புள்ளிகளை பெற்றிருந்தது. இந்திய அணி செமி ஃபைனலில் ஆடுவது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. செமி ஃபனலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதே நேரம் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. செமி ஃபைனலில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்வதால் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.